azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Jan 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Bharatiya Samskriti (Culture of Bharat) is a composite of purity, divinity, sublimity and beauty. This combination is reflected in sports and games. Although there may be differences among nations in their food and recreational habits, the spirit of harmony and unity displayed in sports is a gratifying example to all. It is a distinctive quality of sports that differences are forgotten and persons engage themselves in games in a divine spirit of friendliness and camaraderie. Sports help the players not only to improve their health but also to experience joy. Students, however, should not be content with realising these benefits. It is equally essential to promote purity of the mind and develop large heartedness. True humanness blossoms only when the body, the mind and the spirit are developed harmoniously. The enthusiasm and effort which you display in sports should also be manifested in the spheres of morality and spirituality. (Divine Discourse, 14-Jan-1990)
பாரத கலாசாரம், தூய்மை,தெய்வீகம், பண்பாடு மற்றும் சுந்தரம் ஆகியவற்றின் ஒரு கலவையாகும், இந்த பிணைப்பு,விளையாட்டுப் போட்டிகளில் பிரதிபலிக்கிறது. உணவு மற்றும் கேளிக்கைப் பழக்கங்களில், நாடுகளுக்கு இடையே பல வித்தியாசங்கள் இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளில் காணப்படும் இசைவு மற்றும் ஒற்றுமையின் உணர்வு அனைவரின் மனங்களுக்கும் திருப்தி அளிக்கும் ஒரு உதாரணமாகும்.தங்களது வித்தியாசங்களை மறந்து,மக்கள் விளையாட்டுப் போட்டிகளில் நட்பு மற்றும் சகோதர உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, இவற்றின் ஒரு தனிச் சிறப்பாகும்.விளையாட்டுக்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்துவதற்கு உதவுவதோடு அல்லாமல், அவர்கள் ஆனந்தத்தையும் அனுபவிக்க உதவுகின்றன. இருந்த போதிலும்,மாணவர்கள் இந்த பலன்களை அனுபவிப்பதோடு திருப்தி அடைந்து விடக் கூடாது. மனத்தூய்மையைப் பேணி, பரந்த மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வதும் அதே அளவு இன்றியமையாததாகும். உடல் ,மனம் மற்றும் ஆத்மாவை இசைவோடு பேணும்போது தான் உண்மையான மனிதத்துவம் மலர்கிறது. விளையாட்டுக்களில் நீங்கள் காட்டும் உற்சாகத்தையும், உழைப்பையும், நல்லொழுக்கம் மற்றும் ஆன்மீகத் துறைகளிலும் கூட எடுத்துக் காட்ட வேண்டும்.