azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
There is nothing greater than mother’s love. Mother’s words are always sweet. At times she may use harsh words, but understand that those words are meant only to correct you, not to hurt you. There may be a wicked son or daughter, but there can never be a wicked mother in this world. All of you must understand the value of mother’s love and her concern for you. Among the mother, father, teacher and God, mother is given the highest rank and priority. In the present times, modern youth do not care for their mother or parents. Many think they are highly educated and that the mother does not know anything. It is a great mistake to think poorly about anyone. Never look down upon your mother. Always remember the love she has for you, and at all circumstances strive and make her happy. God will be pleased with you only when you truly make your mother happy. -Divine Discourse, 19-Nov-1999.
தாயின் அன்பை விடச் சிறந்தது எதுவுமில்லை.தாயின் வார்த்தைகள் எப்போதும் இனிமையானவை. சில சமயங்களில் அவள் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடும்,ஆனால்,அந்த வார்த்தைகள் உங்களைத் திருத்துவதற்காகவே அன்றி, தீங்கு விளைவிப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.கொடுமையான ஒரு மகனோ அல்லது மகளோ இருக்கக் கூடும், ஆனால் இந்த உலகில் கொடுமையான ஒரு தாய் ஒரு போதும் இருக்க முடியாது.நீங்கள் அனைவரும் உங்களுக்கான தாயின் அன்பு மற்றும் பரிவின் மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.மாதா, பிதா, குரு, மற்றும் தெய்வத்தின் மத்தியில் தாய்க்கே மிக உயர்ந்த ஸ்தானமும், முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த நவீன கால இளைஞர்கள் தாயையோ அல்லது பெற்றோர்களையோ மதிப்பதில்லை.பலர் தாங்கள் மெத்தப் படித்தவர்கள் என்றும், தாய்க்கு ஒன்றும் தெரியாது என்றும் கருதுகிறார்கள்.எவரைப் பற்றியும் குறைவாக எண்ணுவது மிகவும் தவறானது. உங்கள் தாயை ஒருபோதும் மட்டமாகக் கருதாதீர்கள்.எப்போதும் அவள் உங்கள் மீது வைத்துள்ள அன்பை நினவில் கொண்டு, எல்லா சந்தர்ப்பங்களிலும் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளப் பாடுபடுங்கள். நீங்கள் தாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் மட்டுமே, இறைவன் உங்கள் மீது மகிழ்ச்சி கொள்வான்.