azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
The farmer ignores food and sleep, and focusses on ploughing, levelling, scattering seeds, watering, weeding, guarding and fostering crops. He knows that the harvest he brings home is critical for his family’s subsistence and if he fritters away the precious season in idle pursuits, his family will be confronted with hunger and ill-health. So he prioritises all his attention on farming alone and defers all other pursuits. He bears all difficulties and deprivations, and toils day and night, watches over the crops and garners the grain. As a result, he happily spends the months ahead, in peace and joy with his family. All students and spiritual seekers must learn this lesson from the farmer. Youth is the prime season for mental culture. Use these years intensively and intelligently for your progress irrespective of difficulties and overcome every obstacle. Silence the clamour of your senses, and control hunger and thirst; the urge to sleep and relax also be curbed until spiritual harvest is obtained.(Divine Discourse, 26-Oct-1981)
குடியானவன் பசி,தூக்கம் துறந்து,உழுவது,சமன் செய்வது,விதைப்பது,நீர் பாய்ச்சுவது,களை எடுப்பது, காவல் காப்பது மற்றும் பயிர்களைப் பேணுவது ஆகியவற்றில் தனது கவனத்தைச் செலுத்துகிறான்.அவன், தான் வீட்டிற்குக் கொண்டு வரும் அறுவடை, அவனது குடும்பத்தின் வாழ்விற்கு இன்றியமையாதது என்பதையும்,விலை மதிப்பற்ற பயிரிடும் காலத்தை வெட்டி வேலைகளில் வீணடிப்பானே ஆனால்,அவனது குடும்பம் பசி மற்றும் வியாதிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதையும் அறிவான். எனவே,அவனது கவனத்தின் முன்னுரிமையை எல்லாம் விவசாயத்திற்கு மட்டுமே அளித்து, மற்ற விஷயங்களை ஒத்தி வைத்து விடுகிறான். அவன் அனைத்து கஷ்ட, நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு, இரவு பகலாக உழைத்து, தனது பயிரைக் காப்பாற்றி,தானியத்தை சேகரிக்கிறான்.இதன் விளைவாக,வரும் மாதங்களை அவன், தனது குடும்பத்தினரோடு சாந்தி, சந்தோஷத்துடன், ஆனந்தமாகக் கழிக்கிறான். அனைத்து மாணவர்களும், ஆன்மீக சாதகர்களும், குடியானவனிடமிருந்து இந்த பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். மனதை பண்படுத்துவதற்கு இளமையே முக்கியமான பருவம்.இந்த வருடங்களை, எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், தீவிரமாகவும், புத்திசாலித்தனமாகவும், உங்களது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தி, அனைத்து தடைகளையும் முறியடியுங்கள். புலன்களின் ஆரவாரங்களை அமைதிப்படுத்தி, பசி மற்றும் தாகத்தைக் கட்டுப் படுத்துங்கள்; ஆன்மீக அறுவடை கிட்டும் வரை ,தூக்கம் மற்றும் ஓய்வையும் கட்டுப் படுத்த வேண்டும்.