azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Nov 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
From this day onwards, you must win over everyone through love and compassion. Nara (man) falls into Naraka (hell), through over-indulgence. Senses generally run wild and like raging floods, spell destruction. The festival of Deepavali is to express gratitude at the defeat of the demonic (Naraka) tendencies in humans, which drag them down from Divinity. Naraka is the name for hell, and the demon whose death at the hands of Krishna is celebrated today is called Narakasura, the personification of all the traits of character that obstruct the upward impulses of every person. The home (griha) where the Name of the Lord is not heard is a cave (guha), and nothing more. As you enter it or leave it, and while you are in it, perfume it, illumine it, and purify it with the Lord’s name. Light it as a lamp at dusk and welcome it at dawn as you welcome the Sun. That is the genuine Deepavali, the Festival of Lights. (Divine Discourse, 24-10-1965)
இன்றிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரையும், அன்பு மற்றும் பரிவினால் வெல்ல வேண்டும். நரன் ( மனிதன்), அதிகமாக புலனின்பங்களில் ஈடுபடுவதால், நரகத்தில் வீழ்கிறான்.புலன்கள் வெறித்தனமாக அலைந்து, ஒரு காட்டாற்றைப் போல அழிவை அளிக்கின்றன.மனிதனை தெய்வீக நிலையிலிருந்து கீழே இழுத்துச் செல்லும், அசுர குணங்களின் தோல்விக்கு நன்றி செலுத்தும் தினமே தீபாவளிப் பண்டிகை. மனிதனின் மேல் நோக்கிய முன்னேற்றத்தைத் தடுக்கும் அனைத்து குணங்களின் உருவே ஆன நரகாசுரன் ( நரகம்- நரகாசுரன்) என்று அழைக்கப் படும் அரக்கன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் வதம் செய்யப் பட்டதே இன்று கொண்டாடப் படுகிறது.இறைவனது நாமம் கேட்கப் படாத இல்லம் ( க்ருஹம் ), வெறும் குகையே அன்றி வேறல்ல. நீங்கள் இல்லத்தினுள் செல்லும் போதும், வெளியில் செல்லும் போதும், அதில் இருக்கும் போதும், இறை நாமத்தால் அதற்கு நறுமணம் தெளித்து, நல்லொளி ஏற்றி, தூய்மைப் படுத்துங்கள். மாலையில் அதை ஒரு விளக்காக ஏற்றியும், காலையில் சூரியனை வரவேற்பதைப் போல அதை வரவேற்கவும் செய்யுங்கள். அதுவே, உண்மையான, விளக்குகளின் பண்டிகையான தீபாவளியாகும்.