azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Modesty is essential for woman. Overstepping the limits of modesty is against her innate dharma; crossing its limits brings about many calamities, including destroying the very glory of womanhood. Without modesty, woman is devoid of beauty and culture. Absence of modesty makes the life of a woman, however rich in other accomplishments, a vacuum. Modesty lifts her to the heights of sublime holiness. Modesty is a blend of these qualities - humility, purity of thought and manners, meekness, surrender to high ideals, sensitivity and sweetness of temper. It is the most invaluable of all jewels for women. Through her innate sense of propriety, a modest woman will ever keep within limits. She becomes automatically aware which behaviour is proper and which is not. Modesty is the true test of a woman’s grandeur. A modest woman will stick only to virtuous deeds and behavior, and will wield authority in the home and outside, in the community as well as in the world. (Dharma Vahini, Ch 4.)
அடக்கம் பெண்ணுக்கு இன்றியமையாதது.அடக்கத்தின் வரம்புகளை மீறுவது அவளது ஸ்வதர்மத்திற்குப் புறம்பானது; வரம்புகளை மீறுவது பல துன்பங்களை, பெண்மையின் மகத்துவத்தையே அழிப்பதையும் சேர்த்து, கொண்டு வந்து விட்டு விடும். அடக்கமின்றி பெண் அழகும், கலாசாரமும் அற்றவளாகி விடுகிறாள். எவ்வளவு சிறப்பான மற்ற சாதனைகள் படைத்திருந்தாலும் கூட, அடக்கமின்மை ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு சூன்யமாக்கி விடும். அடக்கம் அவளை, புடம் போடப்பட்ட புனித நிலைகளுக்கு உயர்த்தி விடுகிறது. அடக்கம் என்பது, பணிவு, எண்ணம் மற்றும் செயல்களில் தூய்மை,நாணம், உயர்ந்த இலட்சியங்களுக்கு அர்ப்பணிப்பு, நுண்ணுர்வு மற்றும் இனிமையான சுபாவம் ஆகியவற்றின் ஒரு கலவையே. அதுவே,ஒரு பெண்ணின் அனைத்து ஆபரணங்களிலும் மிகவும் விலை மதிப்பற்றது.அவளது உள்ளார்ந்த மரியாதை உணர்வின் மூலம், ஒரு அடக்கமான பெண் எப்போதும் வரம்புகளுக்கு உட்பட்டே நடந்து கொள்வாள். அவள், எந்த நடத்தை சரியானது, எது தவறானது என்பதை இயல்பாகவே உணர்ந்திருப்பாள்.ஒரு பெண்ணின் சிறப்பிற்கான உண்மையான பரீட்சை அடக்கமே. ஒரு அடக்கமான பெண் நல்லொழுக்கமான செயல்கள் மற்றும் நடத்தையை மட்டுமே பற்றி ஒழுகுவாள்; வீட்டிலும், வெளியிலும், சமூகத்திலும், மற்றும் உலகிலும் கூட அவள் மாட்சிமை செலுத்துவாள்.