azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Just as you prescribe minimum qualifications for every profession, the minimum qualification for grace is surrender of egoism, control over senses and regulated food and recreation (ahara and vihara). A person is made or marred by the company kept. A bad person who falls into good company is able to shed their evil quickly and shine forth in virtue. A good person falling into evil company is overcome by the subtle influence and slides down into evil. The lesser is overpowered by the greater. A drop of sour curd transforms milk, curdling it, separating the butter and turning it into whey. Sacred books are also equally valuable for this transmuting process, but they have to be read and pondered upon, and their lessons have to be put into daily practice. The Gayatri Mantra is a Vedic prayer to the Supreme Intelligence that is immanent in the Universe to kindle the intelligence of the supplicant. (Divine Discourse, 27 Sep 1965
எவ்வாறு ஒவ்வொரு தொழிலுக்கும், நீங்கள் குறைந்த பட்ச தகுதிகளை அறிவுறுத்துகிறீர்களோ, இறை அருளைப் பெறுவதற்கான குறைந்த பட்ச தகுதிகள், அஹங்காரத்தை அர்ப்பணிப்பதும், புலனடக்கமும், முறையான ஆஹார, வ்யவஹாரமும் ஆகும்.ஒருவர் வைத்துக் கொள்ளும் நட்பு வட்டமே அவரை உருவாக்குகிறது அல்லது உருக்குலைக்கிறது.ஒரு கெட்ட மனிதர் நல்லவர்களின் நட்பு வட்டத்திற்கு வரும்போது,தங்களது தீய குணங்களை விரைவாக விடுத்து, நல்லொழுக்கம் கொண்டவராக பிரகாசிக்கிறார். தீயவர்களின் நட்பு வட்டத்தில் விழும் ஒரு நல்ல மனிதர், அதன் நுண்ணிய ஆதிக்கத்தால் கவரப்பட்டு, தீயவற்றில் சறுக்கி விழுந்து விடுகிறார்.அதிகமாக உள்ளவை, குறைவானவற்றை வென்று விடுகிறது. ஒரே ஒரு துளி புளித்த தயிர், பாலை மாற்றி, உறையச் செய்து, வெண்ணையைப் பிரித்து, அதை மோராக மாற்றி விடுகிறது. இந்த மாற்றத்திற்கு புனித நூல்களும் கூட அதே அளவு மதிப்பானவை; ஆனால் அவை படிக்கப் பட்டு, சிந்திக்கப் பட்டு, அவற்றின் பாடங்களை தினசரி பயிற்சியில் கடைப் பிடிக்கப் பட வேண்டும். காயத்ரி மந்திரம் இந்த பிரபஞ்சத்தில் உறையும் பரமாத்மாவை, பக்தனின் புத்தியைத் தூண்டுவதற்காக வேண்டும் ஒரு பிரார்த்தனையாகும்.