azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Five yajnas are prescribed as mandatory for every human being: (1) Activities devoted to the study of scriptures (Rishi Yajna); (2) Activities devoted to parents who confer your birth, foster and guide you (Pitr Yajna); (3) Acts done as reverential homage to God who endowed you with mind, intelligence, memory and consciousness, and who is inherent in your every cell as Rasa, the vital energy (Raso Vai Sah). Indeed, the right use of these instruments that God has given you is Deva Yajna; (4) The fourth is adoration of guests. Everyone must welcome the chance of entertaining a guest and treat them with affection, and please them with sincere hospitality as if sent by God, be it one's own kith and kin or strangers (Atithi Yajna); (5) The final yajna is unselfish acts done while dealing with trees, plants, animals, birds and pets like cats and dogs (Bhoota Yajna). Remember to make every act of yours from sunrise to the onset of sleep as a Yajna! (Divine Discourse, 2 Oct 1981)
ஒவ்வொரு மனிதனும் ஐந்து விதமான யக்ஞங்கள் செய்தாக வேண்டும் என விதிக்கப் பட்டுள்ளது; 1) சாஸ்திரங்களைப் படிப்பது சம்பந்தமான கர்மாக்கள் (ரிஷி யக்ஞம்) 2) உங்களுக்குப் பிறப்பு அளித்து, வளர்த்து, வழி காட்டிய பெற்றோர்களுக்கான கர்மாக்கள் (பித்ரு யக்ஞம்) 3) உங்களுக்கு மனம்,புத்தி, ஞாபக சக்தி மற்றும் உணர்தலை அளித்தவரும், உங்களது ஒவ்வொரு செல்லிலும் சாரமாக (ரஸ) உறைபவரும் (ரஸோ வை ஸஹ) ஆன இறைவனுக்கு மரியாதை கலந்த வழிபாடுகளாகச் செய்யப் படும் கர்மாக்கள். உண்மையில் இறைவன் அளித்த இந்த உபகரணங்களைச் சரியாகப் பயன்படுத்துவதே தேவ யக்ஞமாகும். 4) நான்காவது விருந்தினர்களைப் போற்றுவதாகும். அவர்கள், சொந்த உறவினர்களாக இருந்தாலும் அல்லது அந்நியர்களாக இருந்தாலும்,அவர்களை இறைவனே அனுப்பி வைத்ததாகக் கருதி, ஒவ்வொருவரும், விருந்தினரை உபசரித்து, அவர்களை பரிவுடன் நடத்தி, உளமார்ந்த உபசரிப்பினால் அவர்களை மகிழ்விக்கும்,வாய்ப்பினை வரவேற்க வேண்டும் (அதிதி யக்ஞம்).5) இறுதியாக மரங்கள், செடி கொடிகள், மிருகங்கள், பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளான பூனை மற்றும் நாய்கள் ஆகியவற்றைப் பராமரிக்கும் போது செய்யப் படும் தன்னலமற்ற கர்மாக்கள் ( பூத யக்ஞம்). சூரிய உதயத்திலிருந்து, உறங்கும் வரை ஆற்றப்படும் உங்களது ஒவ்வொரு பணியையும் ஒரு யக்ஞமாகவே ஆக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் !