azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Joy is your birthright; peace is your innermost nature. The Lord is your staff and support. Do not discard it; do not be led away from the path of faith by stories invented by malice and circulated by spite. Take up the name of God; it could be any one of His innumerable ones that appeals to you the most, and also chose the form appropriate to that name, and then start repeating it from now on - that is the royal road to ensure Joy and Peace. That will train you in the feeling of brotherhood and remove enmity towards fellowmen. When you sow seeds in the field, they can be eaten away by ants or washed off by rains or picked on by birds or destroyed by pests, still some seeds stave off all these and grow as strong and sturdy seedlings. Similarly, you must do everything to uphold the privilege of this birth and strive to return to the Lord
ஆனந்தம் உங்கள் பிறப்புரிமை; சாந்தி உங்களது உள்ளார்ந்த இயல்பாகும். இறைவனை உங்களது ஊன்றுகோலும், ஆதாரமும் ஆவான்.அதைக் கைவிட்டு விடாதீர்கள்; வன்மத்தினால் கண்டுபிடிக்கப் பட்டு, த்வேஷத்தினால் பிரசாரம் செய்யப் படும் கட்டுக் கதைகளால், நம்பிக்கையின் பாதையிலிருந்து விலகிச் சென்று விடாதீர்கள்.இறை நாமத்தை எடுத்துக் கொள்ளுங்கள்- அது அவனது எண்ணிலடங்காதவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கலாம்; மேலும் அந்த நாமத்திற்குப் பொருத்தமான ஒரு ரூபத்தையும் தேர்ந்தெடுத்து ,அந்த நாமஸ்மரணையை இப்போதிலிருந்தே தொடங்குங்கள் - அதுவே சாந்தி ,சந்தோஷங்களை உறுதி செய்யும் ராஜபாட்டையாகும். அது உங்களுக்கு சகோதரத்துவத்தின் உணர்வைப் பயில்வித்து, சகமனிதர்கள் மீதான விரோதத்தை விலக்கி விடும். நீங்கள் ஒரு நிலத்தில் விதைகளை விதைக்கும் போது, சில விதைகள் எறும்புகளால் தின்னப்படவோ அல்லது மழைநீரால் அடித்துச் செல்லப்படவோ அல்லது பறவைகளால் எடுத்துச் செல்லப்படவோ அல்லது பூச்சிகளால் அழிக்கப் படவோ செய்யலாம்; இருந்த போதும் சில விதைகள் இவை எல்லாவற்றையும் மீறி, வலுவான, உறுதியான நாற்றுகளாக வளர்ந்து விடும். அதைப் போலவே, இந்தப் பிறவியின் கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கான அனைத்தையும் செய்து, இறைவனிடம் திரும்பிச் செல்ல நீங்கள் பாடுபட வேண்டும்.