azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Oct 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Speaking truth is the foremost quality of a human being. In fact, truth must dance on your tongue. To speak untruth and talk irresponsibly does not behove a human being. If you indulge in useless and indiscriminate talk, how can it be called truth? Before you speak something, you must enquire whether it is truth or not. Speak only truth which emerges from the heart. The entire world has emerged from truth and everything merges into truth. The clouds moving in the sky sometimes obscure the Sun; once the clouds move away, the resplendent Sun is fully visible. Similarly it is only when the dark clouds of resolutions and confusions in our heart are cleared, truth manifests. The five human values are not independent of each other. They closely follow one another. These qualities are God’s gift to humanity. All human beings must manifest these five human values by practicing them. [Divine Discourse, Sep 29, 2006]
சத்தியத்தைப் பேசுவதே ஒரு மனிதனின் தலையாய குணமாகும். உண்மையில் சத்தியம் உங்கள் நாவில் நர்த்தனமாடிக் கொண்டு இருக்க வேண்டும்.அசத்தியத்தைப் பேசுவதும், பொறுப்பின்றிப் பேசுவதும் ஒரு மனிதருக்கு அழகல்ல. நீங்கள் வீணான மற்றும் விவேகமற்ற பேச்சில் ஈடுபட்டால், அதை சத்தியம் என்று எவ்வாறு கூற முடியும்? நீங்கள் எதையாவது பேசுவதற்கு முன், அது உண்மையா இல்லையா என்று விசாரிக்க வேண்டும்.இதயத்திலிருந்து வெளிப்படும் சத்தியத்தை மட்டுமே பேசுங்கள். இந்த உலகனைத்தும் சத்தியத்திலிருந்தே வெளி வந்தது, சத்தியத்திலேயே அனைத்தும் சங்கமும் ஆகிறது.ஆகாயத்தில் உலவும் மேகங்கள் சில சமயம் சூரியனை மறைக்கலாம்;ஒருமுறை அந்த மேகங்கள் கலைந்தவுடன், ஜகத்ஜோதியான சூரியன் முழுமையாகத் தென்படுகிறான்.அதைப் போலவே, நமது இதயத்தில் உள்ள ஸங்கல்பங்கள் மற்றும் குழப்பங்கள் என்ற கருமேகங்கள் கலைந்தால்தான், சத்தியம் வெளிப்படும்.ஐந்து மனிதப் பண்புகளும் ( சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்சை ) ஒன்றுக்கொன்று தனிப்பட்டவை அல்ல.அவை நெருக்கமாக ஒன்றை ஒன்று பின் தொடருகின்றன.இந்த குணங்கள் மனிதகுலத்திற்கு இறைவன் அளித்த பரிசாகும். அனைத்து மனிதர்களும் இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்த ஐந்து மனிதப் பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும்.