azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 26 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 26 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
When common people say,‘Idi naa dehamu’(this is my body), scholars would interpret the expression‘naa dehamu’and say, it connotes ‘I am not the body’ (as ‘naa’ means ‘not’). Extending the same logic, it is possible for you to maintain a state of perfect equanimity unaffected by pain and pleasure at all times by affirming, ‘these sorrows and difficulties as well as happiness and pleasure are not mine. I am beyond these dualities.’ When you say, ‘It is my body’ doesn’t it automatically imply, ‘I’ is different from ‘the body’? When you are separate from your body, why should you feel the pain out of it? The truth is, you are unable to overcome the delusion of body attachment and are also unable to bear the pain caused to the body, as you remain at the level of a human being. Be aware that as long as you are attached to the body, sorrows, difficulties and pain will haunt you. (Divine Discourse, Jan 1, 2009.)
சாதாரண மக்கள், '' இதி நா தேஹமு ''( அதாவது இது என் உடல் ) என்று கூறும்போது, பண்டிதர்கள் அந்த ''நா தேஹமு'' என்ற கூற்றிற்கு , '' இது என் தேஹம் அல்ல'' என்று ( ''நா'' என்றால் அல்ல என்று பொருள்) என்ற விளக்கம் அளிப்பார்கள். இந்த வாதத்தை மேலும் சற்று நீட்டித்து, எல்லாக் காலங்களிலும் உங்களால்,''இந்த துன்பங்கள், கஷ்டங்கள், மேலும், சந்தோஷம் மற்றும் இன்பங்கள் என்னுடையவை அல்ல.நான் இந்த இருமைகளுக்கு அப்பாற் பட்டவன் '' என்று வலியுறுத்தி, இன்ப, துன்பங்களால் பாதிக்கப் படாத ஒரே மாதிரியான சமச்சீர் நிலையைக் கடைப்பிடிக்க முடியும். நீங்கள், '' இது என்னுடைய உடல் '' என்று கூறும்போது, '' நான்'' என்பதும், '' உடல்'' என்பதும் வெவ்வேறு என்றே அர்த்தமாகிறது அல்லவா? எப்போது நீங்கள், உங்கள் உடலிலிருந்து வேறு பட்டவர்களாக இருக்கிறீர்களோ, அதிலிருந்து வரும் துன்பத்தை நீங்கள் ஏன் உணர வேண்டும்?உண்மை என்ன என்றால், நீங்கள் ஒரு மனிதர் என்ற நிலையிலேயே இருப்பதால், உங்களால் உடல் பற்று என்ற மாயையிலிருந்து மீள முடியாமல்,உடலுக்கு ஏற்படும் வலியைச் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் உடல் பற்றோடு இருக்கும் வரை, துன்பங்கள், துயரங்கள் மற்றும் வேதனைகள் உங்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டேதான் இருக்கும்.