azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
To be free is your birthright! When you guide your steps along the path illumined by the universal unbound dharma you will become really free; if you stray away from the light, you will get bound. What you call ‘freedom’ is a certain type of bondage. Genuine freedom is obtained only when delusion is absent, when there is no identification with the body and senses, and no servitude to the objective world. People who have escaped from this servitude and achieved freedom in the genuine sense are very few in number. Bondage lies in every act done with the consciousness of the body as the Self, for one is then the play thing of the senses. Only those who have escaped this fate are free; this ‘Freedom’ is the ideal stage to which dharma leads. With this stage constantly in mind, one who engages in the activity of living, can become a liberated person (muktha-purusha). (Dharma Vahini, Ch 2)
சுதந்திரமாக இருப்பது உங்களது பிறப்புரிமை !பிரபஞ்சமயமான, தளைகளற்ற தர்மத்தினால் ஒளியூட்டப் பட்ட பாதையில்,உங்களது நடப்பிற்கு நீங்கள் வழி காட்டும் போது, நீங்கள் உண்மையிலேயே சுதந்திரமாக ஆகிறீர்கள்;இந்த ஜோதியிலிருந்து விலகினீர்கள் என்றால், கட்டுண்டு விடுவீர்கள். நீங்கள் சுதந்திரம் என்று அழைப்பது ஒருவிதமான அடிமைத் தளமே. உண்மையான சுதந்திரம், மாயை இன்றி,உடல் மற்றும் புலன்களோடு உங்களை இனம் கண்டு கொள்ளாது, பொருட்களாலான இந்த உலகிற்கு அடிமையாகாமல் இருக்கும் போது மட்டுமே கிடைக்கும்.இப்படிப் பட்ட அடிமைத் தளத்திலிருந்து தப்பித்து, உண்மையாகவே சுதந்திரம் பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. உடல் உணர்வே ஆன்மா என்று எண்ணி ஆற்றப் படும் ஒவ்வொரு செயலிலும் அடிமைத் தளம் இருக்கிறது, ஏனெனில் இந்நிலையில் ஒருவர் புலன்களின் விளையாட்டுப் பொருளாக இருக்கிறார். இந்த விதியிலிருந்து தப்பித்தவர்களே சுதந்திரம் பெற்றவர்கள்; இந்த '' சுதந்திரமான '' இலட்சிய நிலைக்கே தர்மம் இட்டுச் செல்கிறது. இந்த நிலையை இடையறாது மனதில் கொண்டு எவர் ஒருவர் வாழ்க்கையின் செயல்களில் ஈடுபடுகிறாரோ, அவரே முக்தி பெற்ற ஒரு மனிதராக ( முக்த- புருஷா) ஆக முடியும்.