azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
There is nothing greater in the world than Bhakti (devotion). Once sage Narada demonstrated to his disciples how devotion is greater than anything in the world, including the Divine. While the Divine was greater than the cosmos, which the Lord as Vamana could measure in two steps, the Lord Himself is held in his heart by the devotion of the devotee. Devotion bestows the highest benefits. Devotion alone is the means to Realisation. Devotion alone confers supreme peace. Devotion is the panacea for all ills. Divine love encompasses all sacred acts. To achieve oneness with the Divine, one will have to be prepared to sacrifice everything. It is not easy for anyone to recognise the truth about the Divine. His leelas (miraculous sportive activities) are beyond the grasp of the mind and speech. There is no Veda or Sastra superior to devotion. (Divine Discourse, Sep 15, 1988)
இந்த உலகில் பக்தியை விடச் சிறந்தது எதுவும் இல்லை. ஒருமுறை நாரத முனிவர் தனது சீடர்களுக்கு,இந்த உலகில் எவ்வாறு, பக்தி எல்லாவற்றையும் விட,தெய்வீகத்தை விடவே கூடச் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டினார். பகவான் வாமனரால் இரண்டு அடிகளில் அளக்கப் பட்ட இந்த பிரபஞ்சத்தை விட, தெய்வம் சிறந்ததாக இருந்தாலும் கூட, இறைவனே கூட, தனது பக்தனால் அவனது இதயத்தில், பக்தியால் கட்டுண்டு விடுகிறான்.பக்தி தலைசிறந்த பயன்களை அளிக்கிறது. பக்தி மட்டுமே ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான முறையாகும்.பக்தி மட்டுமே பிரசாந்தியை அளிக்கிறது. பக்தியே அனைத்துத் துன்பங்களுக்கான தீர்வாகும். தெய்வீக அன்பு அனைத்து புனிதச் செயல்களையும் தன்னுள் கொண்டது. இறைவனுடன் ஒன்றரக் கலப்பதைப் பெற, ஒருவர் அனைத்தையும் தியாகம் செய்யச் சித்தமாக இருக்க வேண்டும். தெய்வீகத்தைப் பற்றிய சத்தியத்தை உணருவது எவருக்கும் எளிதல்ல. அவரது லீலைகள் மனம் மற்றும் வாக்கின் பிடிகளுக்கு அப்பாற்பட்டவை. பக்தியை விடச் சிறந்த வேதமோ அல்லது சாஸ்திரமோ இல்லை.