azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being is an embodiment of the Divine. True human relationship can grow only when this truth is recognised. The first stage is where you recognise, ‘I am in the Light.’ Next is when you know, ‘The Light is in me,’ and finally you realise, ‘I am the Light.’ ‘I’ represents love and light which connotes Supreme Wisdom (Jnana). When love and light unite, there is Realisation. The path of devotion is easier than the path of wisdom. Love should come from within, not forced from outside. Develop spontaneous love. The attitude of petitioning to God for favours should be given up. Love of God should not be based on quid pro quo, seeking favours in exchange for prayers and offerings to God. Place your faith in God and do your duty to the best of your ability. Saturate yourself with love and share it with all. (Divine Discourse, Sep 15, 1988.)
ஒவ்வொரு ஜீவராசியும் இறைவனது ஸ்வரூபமே.உண்மையான மனித உறவுகள், இந்த உண்மையை உணர்ந்தால்தான் வளர முடியும். இதன் முதல் படி, '' நான் ஜோதியில் இருக்கிறேன்'' என நீங்கள் உணர்வதாகும். இதற்கு அடுத்தது, '' இந்த ஜோதி என்னுள் உள்ளது '' என்பதைத் தெரிந்து கொள்ளும் போது; முடிவில், '' நானே இந்த ஜோதி '' என நீங்கள் உணருவது. '' நான்'' என்பது அன்பையும் ஞானத்தைக் குறிக்கும் ஜோதியையும் சுட்டிக் காட்டுகிறது. அன்பும், ஜோதியும் இணையும் போது, தன்னை உணர்தல் ஏற்படுகிறது. ஞான மார்க்கத்தை விட, பக்தி மார்க்கம் எளிதானது.அன்பு என்பது உள்ளிருந்து வர வேண்டும், வெளியிலிருந்து திணிக்கப் படக் கூடாது. தானாக ஊற்றெடுக்கும் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.சலுகைகளுக்காக இறைவனை இறைஞ்சும் இயல்பை விட்டு விட வேண்டும்.இறைவன் பால் கொள்ளும் அன்பு பதிலுக்கு பதிலானதாக, அதாவது பிரார்த்தனைகள் மற்றும் அளிக்கும் காணிக்கைகளுக்கு பதிலாக, சலுகைகளை வேண்டுவதாக இருக்கக் கூடாது. உங்கள் நம்பிக்கையை இறைவன் மீது வைத்து, உங்களால் இயன்ற வரை உங்களது கடமைகளை ஆற்றுங்கள். உங்களை அன்பினால் நிரப்பிக் கொண்டு, அந்த அன்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.