azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Study of books alone will not enhance your capability; they will merely provide you with superficial or bookish knowledge. This obviously is not enough. Real capability and strength come by tapping the Inner Power latent in you. All that is outside is artificial. Real truth and power are both inside, in your heart. It is the heart that must be strengthened, but, unaware of this fact, people become furiously active in the external world, only to get lost there. There are many types of food catering to the needs of the gross body but what about food for the heart? That food can be obtained only when you turn your head toward God. You must understand the subtle linkages here – food, head, and God. Thus, along with the acquisition of worldly knowledge, you must also give importance to culture and refinement. (Divine Discourse, May 25, 2000)
புத்தகங்களைப் படிப்பது மட்டும் உங்கள் திறனை அதிகரிக்காது;அவை உங்களுக்கு வெறும் மேலோட்டமான அல்லது புத்தக அறிவைத்தான் அளிக்கும். இது எனவே போதுமானதல்ல.உண்மையான திறனும், சக்தியும், உங்களுள் மறைந்து நிற்கும் ஆத்ம சக்தியைப் பயன்படுத்துவதாலேயே வரும்.வெளியில் இருக்கும் அனைத்தும் செயற்கையானவையே.உண்மையான சத்தியமும், சக்தியும் உங்கள் இதயங்களில், உள்ளார்ந்து உள்ளன.இதயத்தைத் தான் பலப்படுத்த வேண்டும்; இந்த உண்மையை அறியாத மக்கள் வெளிப்புற உலகில், ஆக்ரோஷத்துடன் ஈடுபட்டு, அங்கு வழி தடுமாறி விடுகிறார்கள்.ஸ்தூலமான உடலின் தேவைகளுக்கு பல விதமான உணவுகள் உள்ளன; ஆனால் இதயத்திற்கான உணவு எது?அந்த உணவை, உங்கள் தலையை (கவனத்தை) இறைவனை நோக்கித் திருப்பினால் மட்டுமே பெற முடியும். இங்கு - உணவு,கவனம் மற்றும் கடவுள் (food, head, and God)- இந்த மூன்றுக்கும் உள்ள சூக்ஷ்மமான தொடர்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகியலான அறிவுடன் கூடவே,கலாசாரம் மற்றும் பண்புடமைக்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.