azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

There is electromagnetic energy in every body. Nature is the embodiment of the same energy. This energy may assume different forms, but its essential character is one and the same. A lighted bulb, a fan that is revolving, and many other things working through electrical power depend on the same kind of current. The energy may manifest itself in the form of light, heat, or magnetic energy, but it proclaims the power of the Divine, which is the source of all energy. This electromagnetic energy in man expresses itself in the form of radiation. It is also called reflection of the ‘Inner being’. The power of sight, hearing, speech, digestion, and movement of the limbs is derived from this energy. Water also contains this energy. In fact, the entire cosmos is permeated by this divine energy. On the basis of this, Vedanta declares,“Sarvam khalu idam Brahma(verily, every being is Divine).” (Divine Discourse, Aug 25, 1998.)
ஒவ்வொரு உடலிலும் மின்காந்த சக்தி உள்ளது.இயற்கையும் இந்த சக்தியின் ஸ்வரூபமே. இந்த சக்தி பலவிதமான ரூபங்களை ஏற்கக் கூடும், ஆனால் அதன் அத்தியாவசியமான தன்மை ஒன்றே. ஒளி விடும் பல்பு, சுயலும் மின்விசிறி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பல கருவிகள் ஒரே விதமான மின்சாரத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. இந்த சக்தி ஒளியாக, வெப்பமாக அல்லது காந்த சக்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம்; ஆனால் அது பறைசாற்றுவது, அனைத்து சக்திக்கும் மூலமான தெய்வீக சக்தியையே.இந்த மின்காந்த சக்தி மனிதனில் கதிர் வீச்சாக வெளிப்படுகிறது. இது '' அந்தராத்மாவின் '' பிரதிபலிப்பு என்றும் அழைக்கப் படுகிறது. காண்பது, கேட்பது,பேசுவது,ஜீரணமாவது மற்றும் அங்கங்கள் அசைவது என்ற அனைத்தின் சக்தியும், இந்த சக்தியிலிருந்து தான் பெறப்படுகிறது.நீரிலும் இந்த சக்தி உள்ளது.உண்மையில் இந்த பிரபஞ்சமே இந்த சக்தியில் தோய்ந்தது தான். இதன் அடிப்படையில் தான் வேதாந்தம், '' ஸர்வம் கலுவிதம் ப்ரம்மா '' ( உண்மையில், ஒவ்வொரு ஜீவராசியும் தெய்வீகமே) என்று பறைசாற்றுகிறது.