azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
The heart must yearn for His voice, His form, His flute, His smile, His sport and His pranks. That is thetapas(penance) which is rewarded by His grace. The yearning must be so deep that all body consciousness is lost, the senses are ineffective, and the mind is inactive, the intelligence is at a standstill, and all ideas of duality disappear. The individual sees before him only step after step ofAanandaleading him to the highest bliss of merging in the Lord. The culture of Bharath has marked out the guidelines for achieving this bliss. This bliss is the consummation of all sweetness, all the joy, and all the fulfilment derived from all the highest desires. But yet man is struggling to achieve petty things, paltry joys and low desires. When you seek God, you must not be misled into by-paths and mirages. The seeker after gold must cast away brass and other yellow metals which may distract or at times even destroy him. (Divine Discourse, Aug 19, 1968.)
இதயம் அவனது( பகவான் ஸ்ரீகிருஷ்ணர்) குரல்,ரூபம்,அவனது புல்லாங்குழல், அவனது புன்னகை, அவனது விளையாட்டு மற்றும் அவனது லீலைகளுக்காக ஏங்க வேண்டும்.அவன் அருள் பாலிக்கும் தவம் அதுவே. இந்த ஏக்கம் எவ்வளவு ஆழ்ந்ததாக இருக்க வேண்டும் என்றால்,உடல் உணர்வே இன்றியும்,புலன்கள் செயலற்றும்,மனமும் பலனின்றியும், புத்தி அசைவற்றும், இருமையின் எல்லாக் கருத்துக்களும் மறைந்தும் இருக்க வேண்டும். தனி மனிதன் அவனுக்கு முன்னால், ஆனந்தத்தின் படிகள் ஒவ்வொன்றாக அவனை இறைவனுடன் ஒன்றரக் கலக்கும் பேரானந்த பெருநிலைக்கு இட்டுச் செல்வதை மட்டுமே காண்பான்.பாரத கலாசாரம் இந்த பேரானந்தத்தைப் பெறுவதற்கான வழி முறைகளை சுட்டிக் காட்டுகிறது. மிக உயர்ந்த ஆசைகளிலிருந்து பெறப்படும் அனைத்து இனிமை,அனைத்து சந்தோஷம் மற்றும் அனைத்து பரிபூரணத்துவங்களின் சங்கமமே இந்தப் பேரானந்தம். ஆனால் மனிதனோ,, அற்பமான விஷயங்கள்,துச்சமான சந்தோஷங்கள் மற்றும் கீழ்த்தரமான ஆசைகளுக்காகவே போராடிக் கொண்டு இருக்கிறான்.நீங்கள் இறைவனை நாடும்போது, குறுக்கு வழிகளிலும், கானல் நீர்களாலும் கவர்ந்து இழுக்கப் படக்கூடாது.தங்கத்தை நாடுபவர், அவரது கவனத்தைத் தடுமாறச் செய்யும் அல்லது சில சமயங்களில் அவர்களையே அழித்து விடும், மற்ற மஞ்சள் உலோகங்களான பித்தளை போன்றவற்றை தூர எறிந்து விட வேண்டும்.