azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Sep 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Your heart should be like glass, with the spiritual light inside illuminating the world outside. The inner urges on interacting with the world outside should make one lean towards service, empathy and mutual help. Presently, people read and study all kinds of unintelligible Vedantic texts and struggle with commentaries and translations to grasp their sense. Knowledge is being poured down their throats; but the potion does not get down to soften their heart. The spiritual truths should not be put on for mere public exhibition, as in a drama, where appropriate dresses are worn on the stage but taken off when the actor moves off the stage. They must be adhered to all the time to derive the Atma ananda (Bliss of the Soul) which they genuinely confer. Bliss is easily attained by careful, well-timed and regulated discipline; it cannot be got by spurts and skips. You must take the effort to learn each lesson of virtue through systematic study and diligent application to attain success. (Divine Discourse, Sep 21, 1960.)
உங்களது இதயம் கண்ணாடியைப் போன்று இருக்க வேண்டும்; அதனுள் இருக்கும் ஆன்மீக ஒளி வெளி உலகிற்கு பிரகாசம் அளிக்க வேண்டும்.வெளி உலகுடன் உறவாடும் போது, உள்ளார்ந்த உந்துதல்கள் ஒருவரை சேவை, பச்சாதாபம் மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் பக்கம் ஈர்க்க வேண்டும். மனிதர்கள் இன்று பல விதமான புரியாத வேதாந்த கிரந்தங்களைப் படித்து விட்டு, அவற்றின் பாஷ்யங்கள் மற்றும் மொழி பெயர்ப்புக்களுடன், அவைகளின் சாரத்தைப் புரிந்து கொள்ளப் போராடுகிறார்கள்.அறிவு அவர்கள் தொண்டை வழியாக ஊற்றித் திணிக்கப் படுகிறது; ஆனால் அந்த திரவம்கீழ் இறங்கி அவர்களது இதயங்களை மிருதுவானவையாக ஆக்குவதில்லை.ஒரு நாடகத்தில், ஒரு நடிகர் தனது பாத்திரத்திற்குத் தேவையான வேஷத்தைப் போட்டுக் கொண்டு விட்டு, அந்த மேடையிலிருந்து இறங்கும் போது அவற்றை கழட்டி விடுவதைப் போல, ஆன்மீக உண்மைகளை வெறும் வெளியில் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது. அவை உண்மையிலேயே அளிக்கும் ஆத்மானந்திற்காக அவற்றை எக்காலத்திலும் பற்றி ஒழுக வேண்டும்.ஆனந்தத்தை கவனமான,சரியான நேரப்படியான, நெறி முறையான கட்டுப்பாட்டினால் எளிதாகப் பெற முடியும்; அதை இங்கும் அங்கும் தாவிக் குதிப்பதால் பெற இயலாது. நல்லொழுக்கத்தின் ஒவ்வொரு பாடத்தையும் நீங்கள் முறையாகக் கற்பது மற்றும் புத்திசாலித்தனமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமாகப் பெறப் பாடுபட வேண்டும்.