azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Practicaldharma,or rules of good behaviour(achara-dharma),relates to temporary matters concerning our problems and physical needs, to our passing relationships with the objective world. The very instrument of those rules, the human body, is not permanent, so how can then these rules be eternal? How can their nature be true? The Eternal cannot be expressed by the evanescent; light cannot be revealed from darkness. The Eternal emerges only from the Eternal; truth emanates only from truth. Therefore, follow the objective codes ofdharmarelating to worldly activities and daily life, with the full knowledge and consciousness of the inner basicAtma-dharma.Then only can the internal and external urges cooperate and yield the bliss of harmonious progress. If in your daily avocations, you translate the real values of eternaldharmainto love-filled acts, then your duty to the inner reality, theAtma-dharma,is also fulfilled. Always build your living on the Atmic base; then, your spiritual progress is assured. (Dharma Vahini, Ch 2.)
நடைமுறை தர்மம்,அதாவது நன்னடத்தையின் விதிகள் (ஆசார தர்மம்) என்பவை, கலைந்து மறைந்து விடும் இந்த உலக வாழ்க்கையில்,நமது உறவுகளில் வரும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் பற்றியவை.இந்த விதி முறைகளின் கருவியான இந்த மனித உடலே நிரந்தமற்றதாக இருக்கும் போது, இந்த விதிமுறைகள் எவ்வாறு சாஸ்வதமானதாக இருக்க முடியும்?அவைகளின் இயல்பு உண்மையானதாக எப்படி இருக்க முடியும்? நிரந்தமானவற்றை, அநித்யமானவைகளால் விவரிக்க முடியாது;ஒளியை, இருள் எடுத்துக் காட்ட முடியாது.சாஸ்வதமானவை, சாஸ்வதமாக இருப்பவற்றிலிருந்து மட்டுமே வெளிப்படும்; சத்யம், சத்யத்திலிருந்து மட்டுமே தோன்றும்.எனவே, உள்ளார்ந்த ஆத்ம தர்மத்தின் முழு ஞானம் மற்றும் உணர்வோடு, உலகியலான செயல்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் தார்மீகக் கோட்பாடுகளைக் கடைப்பிடியுங்கள். அதன் பிறகு தான், வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த உந்துதல்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து,இசைவான முன்னேற்றத்தின் ஆனந்தத்தைத் தர முடியும். உங்களது அன்றாட வாழ்க்கையின் பணிகளில்,சாஸ்வதமான தர்மத்தின் உண்மையான மதிப்புகளை, அன்பு நிறைந்த செயல்களாக மாற்றி விடுவீர்களானால், பின்னர் உங்களது உள்ளார்ந்த உண்மை நிலையான ஆத்ம தர்மத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளும் பூர்த்தியாகி விடும். உங்களது வாழ்க்கையை ஆத்மாவின் அடிப்படையில் உருவாக்குங்கள்; பின்னர் உங்களது ஆன்மீக முன்னேற்றம் உறுதி செய்யப் பட்டு விடும்.