azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 30 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 30 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
When you do not discriminate the process and purpose of every act, and go ahead doing them with no understanding, you reduce them to a funny fossilized routine. Once even Prahlada observed, “Since it is difficult to destroy egotism, people take the easier option to offer dumb animals at the altar. Animal sacrifice is the manifestation of the quality of inertia(tamo guna);it is the path of bondage. Sacrifice of the animal of egotism is the purest sacrifice(satwic yajna)on the Godward path of liberation.” Thus the highest goal(paramaartha)of the past is turned into the fool’s goal(paaramaartha)of these days! Similarly every one of the ancient practices, which were once full of meaning has grown wild beyond recognition. It is now impossible to pluck the tree by the roots and plant a new one. So the existing tree must be trimmed and trained to grow straight. Always remember the highest goal and never dilute it into the lowest. (Dharma Vahini, Ch 1)
ஒவ்வொரு செயலின் முறை மற்றும் அதன் குறிக்கோளை பகுத்தாராயாது, அதை புரியாமல் செய்து கொண்டே போனீர்களானால்,நீங்கள் அவற்றை ஒரு புராதன மற்றும் கேலிக்கூத்தான வழக்கமான நிலைக்குத் தாழ்த்தி விடுகிறீர்கள்.ஒரு முறை பக்த ப்ரஹலாதன் கூட,''அஹங்காரத்தை அழிப்பது கடினமாக இருப்பதால், மனிதர்கள் சுலபமான வழியான , பேச இயலாத மிருகங்களை இறைச் சன்னிதானத்தில் பலி கொடுப்பதை எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். மிருகங்களை பலி கொடுப்பது தமோ குணத்தின் வெளிப்பாடாகும்; அதுவே பந்தங்களை உருவாக்கும் வழியும் ஆகும். அஹங்காரம் என்ற மிருகத்தை பலியிடுவதே இறைவனது பாதைக்கான ஸாத்வீகமான தூய யக்ஞமாகும் .'' என்று கூறினார்.இவ்வாறு பண்டைய காலத்தின் தலைசிறந்த ஒரு குறிக்கோளை (பரமார்த்தத்தை), இந்நாளில் முட்டாள் தனமான குறிக்கோளாக (பாராமர்த்தம் ) மாற்றி விடுகிறார்கள் ! இதைப் போலவே, முன்னர் முழுமையான உள் அர்த்தம் கொண்டிருந்த, பண்டைய பழக்க வழக்கங்கள், இனம் கண்டு கொள்ள முடியாத அளவு, காட்டுத் தனமாக வளர்ந்து விட்டன. இப்போது, ஒவ்வொரு மரத்தையும் வேறோடு பிடுங்கி விட்டு மற்றொரு மரத்தை நடுவது கடினமான காரியமே. எனவே,இருக்கும் மரத்தின் கிளைகளை நேர்த்தியாக்கி ,அவற்றை நேராக வளருவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். எப்போதும் தலை சிறந்த குறிக்கோளை நினைவில் கொண்டு, ஒருபோதும் அதை வலுவற்ற கீழ்த்தரமானதாக ஆக்கி விடாதீர்கள்.