azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
I have come to reform you; I won’t leave you until I do that. Even if you get away before I do that, don’t think you can escape Me; I will hold on to you. I am not worried if you leave Me, for I am not anxious that there should be a huge gathering! Who gave hand-written invitation to everyone present here? People come, on their own, in thousands - you attach yourselves to Me! I am unattached. I am attached only to the task. But be assured of one thing. Whether you come to Me or not, you are all in Me. I have the love of a thousand mothers. I love each one of you and protect you always. Whenever I appear to be angry, remember, it is only love in another form. I do not have even an iota of anger in Me. I express My disappointment when you do not shape up as I expect. (Divine Discourse, Feb 11, 1964.)
நான் உங்களைச் சீர்திருத்துவதற்காக வந்துள்ளேன்;அதைச் செய்யும் வரை உங்களை விட்டு நான் போக மாட்டேன். நான் அதைச் செய்யும் முன், நீங்கள் என்னிடம் இருந்து விலகி விட்டால், என்னிடமிருந்து தப்பித்து விட்டதாக எண்ணாதீர்கள்; நான் உங்களைப் பிடித்து வைத்திருப்பேன்.நீங்கள் என்னிடமிருந்து விலகி விட்டால், நான் அதற்காகக் கவலைப் படுவதில்லை; ஏனெனில் பெரிய கூட்டம் இருக்க வேண்டும் என்ற கவலை எனக்கில்லை.இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் யார் கையால் எழுதிய பத்திரிக்கை கொடுத்தார்கள்? மனிதர்கள் தாங்களாகவே, ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்- நீங்கள் உங்களை என்னுடன் பிணைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ! நான் பற்றற்று இருக்கிறேன். நான் என்னுடைய அவதாரப் பணிக்கு மட்டுமே கட்டுண்டவன்.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.நீங்கள் என்னிடம் வந்தாலும், வராவிட்டாலும், நீங்கள் அனைவரும் என்னுள் உள்ளீர்கள்.ஆயிரம் தாய்மாரின் அன்பு கொண்டவன் நான்.நான் உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன்; உங்களை எப்போதும் காத்திடுவேன். எப்போதெல்லாம் நான் கோபம் கொண்டது போலத் தோன்றுகிறோனோ,அது அன்பின் மற்றொரு ரூபம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னுள் ஒரு இம்மி அளவும் கோபம் கிடையாது.நான் எதிர்பார்த்த அளவு நீங்கள் உருவாகவில்லை என்றால், நான் என்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறேன்.