azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
When visiting a temple of Lord Shiva, none should pass between the bull (Nandi) and theLingam- theJiva(individual soul) and Lord Shiva, it is said; for they are to merge into one. Shiva must be seen through the two horns of Nandi, they say. When asked the reason for this procedure people reply, "Well, it is holier than other methods of viewing the Lingam". But the inner meaning is, ‘You must see the Shiva in Jiva’ -Pasu(animal) and Pasupathi (Lord of all beings) are one: Nandi and Iswara become Nandiswara. When in bondage, it is Nandi; when the bound becomes free, it isIswara- Nandiswara! This Union is entitled to be honoured. WhenPasuis offered to thePasupathi,and its separate identity is cast away, it is trueYajna(sacrifice). Today, these symbolic acts have changed beyond recognition. The practices of today and the principles of yesterday are far apart – the smallest detail of secular life must be inspired by the higher ideal of spiritual fulfillment. (Divine Discourse, Feb 11, 1964.)
சிவன் கோவிலுக்குச் செல்லும் போது, நந்திக்கும்,லிங்கத்திற்கும்- ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும்- இடையில் எவரும் செல்லக் கூடாது என்பார்கள்; ஏனெனில் அவை இரண்டும் ஒன்றரக் கலக்க வேண்டும். சிவனை, நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையின் வழியாகக் காண வேண்டும் என்பார்கள். இந்த முறைக்குக் காரணம் கேட்டால், மனிதர்கள், '' லிங்கத்தை தரிசிப்பதற்கு மற்ற முறைகளை விட இது புனிதமானது ''என்று பதிலளிப்பார்கள்.ஆனால், இதன் உட்பொருள், '' நீங்கள் சிவனை , ஜீவாத்மாவிற்குள் காண வேண்டும் '' என்பதாகும். பசுவும் ( மிருகம் ), பசுபதியும் ( இறைவனும்) ஒன்றே; நந்தியும், ஈஸ்வரனும் சேர்ந்து நந்தீஸ்வரனாக ஆகிறது. கட்டுண்ட போது அது நந்தியாகிறது: தளைகள் நீக்கப் பட்டு , சுதந்திரம் பெற்ற போது ஈஸ்வரனாக - நந்தீஸ்வரனாக ஆகிறது! இந்த இரண்டின் சங்கமம் போற்றப் பட வேண்டியதாகும். எப்போது பசு, பசுபதிக்கு அர்ப்பணிக்கப் பட்டு, அதனுடைய தனித் தன்மை விடப் படுகிறதோ, அதுவே உண்மையான யக்ஞம் ஆகிறது. இன்று இந்த அர்த்தமுள்ள செயல்கள், இனம் கண்டு கொள்ள முடியாத அளவு மாறி விட்டன.இன்றைய பழக்கங்களும், பண்டைய கொள்கைகளும் ஒன்றுக்கு ஒன்று மிகவும் அப்பாற்பட்டு உள்ளன; நடைமுறை வாழ்க்கையின் மிகச் சிறிய விஷயம் கூட, தலை சிறந்த ஆன்மீகக் கோட்பாடுகளால் உந்தப் பட வேண்டும்.