azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

What is meant byDharma?What is its essence? Can common people lead a happy life and survive if they stick toDharma?These doubts confuse people’s minds in the course of their natural livelihood. Solving them is necessary, even urgent. As soon as the wordDharmais mentioned, people relate it to giving of alms, providing food and shelter to pilgrims, adherence to one's traditional profession or craft, law-abiding nature, the discrimination between right and wrong, the pursuit of one's innate nature over the freaks of one's own mind, the fruition of one's fondest desires, etc. Of course, it is a long, long time since the spotless countenance ofDharmahas been tarnished beyond recognition. Now, who can cure the present blindness? All of you! All you need to do is to slay the six-fold beast of inner enemies, leading you on to disaster through the pulls of lust, anger, greed, delusion, pride and hate. Only thenDharmacan be restored. (Dharma Vahini, Ch 1)
தர்மம் என்றால் என்ன? அதன் சாரம் என்ன? தர்மத்தைப் பற்றி ஒழுகினால், சாதாரண மக்கள் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து ஜீவிக்க முடியுமா? அவர்களது இயற்கையான வாழ்க்கைப் போராட்டத்தில் , இந்த சந்தேகங்கள் மனிதர்களின் மனதைக் குழப்புகின்றன. இவற்றை நீக்குவது தேவை மேலும் அவசரமும் கூட.'' தர்மம்'' என்ற வார்த்தையைச் சொன்னவுடன், மனிதர்கள் அதனை, தானம் அளிப்பது, யாத்ரீகர்களுக்கு இருக்க இடமும் , உண்ண உணவும் அளிப்பது,தங்களது பாரம்பரியத் தொழில் அல்லது கைத்திறனைக் கடைப்பிடிப்பது, சட்டங்களைக் கடைப்பிடிக்கும் இயல்பு,நல்லவை மற்றும் கெட்டவற்றைப் பகுத்தறிவது, மனதின் வக்ரங்களுக்கு எதிராக ஒருவரது உள்ளார்ந்த இயல்பைப் பின்பற்றுவது, ஒருவரது மிகவும் பிடித்தமான ஆசைகள் நிறைவேறுவது போன்றவற்றோடு சம்பந்தப் படுத்திப் பார்க்கிறார்கள்.தர்மத்தின் களங்கமற்ற தோற்றத்தை இனம் கண்டு கொள்ள முடியாத அளவு ஒளி குன்றச் செய்து பல காலம் ஆகி விட்டது.இப்போது இந்தக் குருட்டுத் தனத்தை யார் சரி செய்வது? நீங்கள் எல்லோரும் தான் ! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களது உள்ளார்ந்த மிருக எதிரிகளான காமம், க்ரோதம், லோபம்,மோஹம், மதம் மற்றும் மாத்ஸர்யம் ஆகியவற்றை அழிப்பதே. அதன் பிறகே தர்மத்தை நிலை நாட்ட முடியும்.