azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
The happiness that one derives from virtues is far superior to the happiness that we get from the possession of wealth. Unfortunately the educated youth are striving for wealth, physical strength and friendship. But all these have little value without the wealth of character. For men or women, character is the foundation. If one lacks character, one becomes feeble in all other respects. People of those days strove for noble character. They were prepared to give up their very lives for a righteous cause. Women strived to uphold the honor of their husbands. The strength of an individual lies in one’s character, not in the wealth one earns. One should be prepared to face any hardship to lead a virtuous life. The country is in dire straits due to the absence of men and women of character. Materialistic wealth is not what we need today. We need to earn the wealth of virtues. (Divine Discourse, Nov 19, 2002.)
நல்லொழுக்கத்தின் மூலம் ஒருவர் பெறும் சந்தோஷம், செல்வத்தின் மூலம் நாம் பெறும் சந்தோஷத்தை விட மிகவும் சிறந்தது.துரதிருஷ்ட வசமாக,படித்த இளைஞர்கள் செல்வம், உடல் வலிமை மற்றும் நட்புக்காகப் பாடுபடுகின்றனர். ஆனால் நல்லொழுக்கம் என்ற செல்வம் இல்லாமல், இவை அனைத்திற்கும் எந்த மதிப்பும் இல்லை.ஆண், பெண் இருபாலருக்கும் நல்லொழுக்கமே அஸ்திவாரம்.நல்லொழுக்கம் இல்லை எனில் ஒருவர் எல்லா அம்சங்களிலும் பலஹீனமாகவே இருப்பார்.பண்டைய காலத்தில் மனிதர்கள் சீரிய குண நலன்களுக்காகப் பாடுபட்டனர்.தார்மீகக் கொள்கைக்காக, அவர்கள் தங்கள் உயிரைக் கூட விடச் சித்தமாக இருந்தார்கள்.பெண்கள் தங்களது கணவன்மார்களின் கௌரவத்தை நிலை நிறுத்தப் பாடுபட்டனர்.ஒரு தனி மனிதரின் வலிமை அவரது நல்லொழுக்கத்தில் இருக்கிறதே அன்றி , அவர் ஈட்டும் செல்வத்தில் அல்ல. ஒரு தார்மீகமான வாழ்க்கை நடத்துவதற்கு ஒருவர் எந்தக் கஷ்டத்தையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நல்லொழுக்கம் உள்ள ஆண்களும், பெண்களும் இல்லாததனால், நாடு இன்று மோசமான நிலையில் இருக்கிறது. இன்று நமது தேவை உலகியலான செல்வம் அல்ல.நாம் நல்லொழுக்கம் என்ற செல்வத்தை ஈட்ட வேண்டும்.