azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
No one is outside the Love of the Lord. The eighteen-year old boy is asked by the mother to go into the kitchen, take a plate and serve himself rice and curry and eat. The mother is not callous or unkind; she knows the capacity of the boy and treats him as he ought to be treated. For another son she accompanies to the kitchen, sits by his side and serves food to him. But she seats the third son on her lap and feeds with many a song in order to make the process pleasant for the child. Do not think that the mother is partial; no, she is only making use of her knowledge of the capacity of her children to make them progress. That is the nature of maternal love. (Divine Discourse, Sep 29, 1960)
இறைவனது அன்பு வட்டத்திற்கு வெளியில் எவரும் இல்லை.ஒரு 18 வயது பையனை, அவனது தாய் சமையல் அறைக்குச் சென்று, ஒருதட்டை எடுத்துக் கொண்டு தானே சாதத்தையும் , கரியையும் பரிமாறிக் கொண்டு சாப்பிடச் சொல்கிறாள்.அந்தத் தாய் பொறுப்பற்றவளோ அல்லது பாசமற்றவளோ அல்ல. அவளுக்கு அந்தப் பையனின் திறனைப் பற்றித் தெரியும்; எனவே, அவனை எவ்வாறு நடத்த வேண்டுமோ அவ்வாறு நடத்துகிறாள்.மற்றொரு பையனை, அவளே சமையல் அறைக்கு வந்து, அவனருகில் உட்கார்ந்து, அவனுக்கு உணவை பரிமாறுகிறாள். ஆனால் தனது மூன்றாவது ( குட்டிப்) பையனை தனது மடியில் அமர்த்தி,உணவு உண்ணும் முறையை இனிமையானதாக ஆக்க பாட்டெல்லாம் பாடி ஊட்டுகிறாள்.இந்தத் தாய் பாரபட்சமானவள் என எண்ணாதீர்கள்; இல்லை . அவள் தனது குழந்தைகளின் திறனைப் பற்றிய அறிவை, அவர்களது முன்னேறுவதற்கு பயன்படுத்துகிறாள். இதுவே தாய் அன்பின் தன்மை.