azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Every village and town today is sick with animosities and petty quarrels. Even though many attempts have been made during the past years to better the lot of the common people, results have been far below expectations and expense. This is because of the absence of three requisites essential for all advancement:Dhairyam, UtsahamandAanandam(courage, enthusiasm and joy). Nature has sufficient beauty to instill awe and wonder, to impart courage, to inspire enthusiasm and fill you with joy! It is a type of falsevairagyam(non-attachment) to close one’s eye to all the beauty, plenty, mercy that you receive from Mother Nature, and to run around in sorrow, bewailing your lot. Be thankful to the Lord for the chance given to you to serve others and yourselves, to witness His Glory and Grace, and look upon all as brothers and sisters.The virtues of the people are the treasures of the State; the remembrance of the name of the Lord is the root of all virtues. (Divine Discourse, Nov 23, 1960.)
இன்று ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரமும் வெறுப்புக்கள் மற்றும் சண்டை சச்சரவுகளால் பீடிக்கப் பட்டுள்ளன.சாதாரண மனிதர்களின் நலனை மேம்படுத்த பல முயற்சிகள் முந்தைய வருடங்களில் மேற்கொள்ளப் பட்டு இருந்தாலும், எதிர்ப்பார்ப்புக்கள் மற்றும் செலவினங்களுக்கு ஏற்ற அளவை விட, பலன்கள், மிகக் குறைவாகவே உள்ளன. இது ஏனென்றால், எந்த முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமான மூன்று விஷயங்கள் இல்லாதிருப்பது தான்; தைரியம்,உற்சாகம் மற்றும் ஆனந்தம். பரவசத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கும், தைரியத்தை அளிப்பதற்கும், உற்சாகத்தை ஊட்டி , ஆனந்தம் அளிப்பதற்கும் தேவையான சுந்தரமும், அழகும் இயற்கையில் உள்ளது ! இயற்கை அன்னை அளிக்கும் இந்த அனைத்து அளவற்ற அழகு மற்றும் அருளைக் கண்டு கொள்ளாது , துன்பத்தில் உங்களைப் பற்றிப் புலம்பித் திரிவது ஒரு விதமான பொய்யான வைராக்யம் போன்றதே. பிறருக்கும், உங்களுக்குமே சேவை ஆற்றுவதற்கும், இறைவனது மாட்சிமை மற்றும் அருளைக் காண்பதற்கும்,அனைவரையும் சகோதர, சகோதரிகளாகக் கருவதற்கும் கிடைத்த வாய்ப்பிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். அனைத்து மக்களின் நற்குணங்களும் ஒரு நாட்டின் பொக்கிஷங்களே; இறை நாமத்தை நினைவு கூறுவதே அனைத்து நற்குணங்களின் ஆணி வேராகும்.