azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Aug 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Fill your heart with love. You will be betraying yourself if you entertain evil thoughts but pretend outwardly to be full of love. Divine love will manifest itself anywhere at any time. One filled with Divine Love will be fearless, will seek nothing from others, and will be spontaneous and selfless in expressing their love. There is no need to pray for gifts from God. God will give of His own accord what is good for such a devotee. Did not Shabari and Jatayu get the Lord’s grace without their asking for it? God will decide what, when, and where to give. Hence, dedicate all actions to God and Let Him decide what you are fit to receive. When everything is left to God with pure love and total faith, God will take full care of you. People today lack such firm faith. Great devotees of the past who faced ordeals with faith and fortitude, ultimately secured divine grace and experienced bliss. [Divine Discourse, June 20, 1996]
உங்கள் இதயத்தை அன்பால் நிரப்புங்கள்.வெளியில் அன்பு நிறைந்தவர்களைப் போலக் காட்டிக் கொண்டு,தீய எண்ணங்களுக்கு இடம் அளித்தீர்களே ஆனால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொண்டது போலாகும். தெய்வீக அன்பு எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.தெய்வீக அன்பு நிறைந்த ஒருவர் அச்சமற்றவராகவும்,பிறரிடம் எதையும் எதிர் பார்க்காதவராகவும், தங்களது அன்பை தடையின்றியும், தன்னலமற்றும் வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்.இறைவனிடம் பரிசுகள் வேண்டி, பிரார்த்திக்க வேண்டிய அவசியமில்லை.இறைவன் தானாகவே, இப்படிப் பட்ட பக்தனுக்கு எது நல்லதோ அதை அளித்திடுவான். அன்னை சபரியும், ஜடாயுவும், அவர்கள் கேட்காமலேயே இறைவனது அருளைப் பெறவில்லையா? எதை,எப்போது, எங்கு அளிக்க வேண்டும் என்பதை இறைவன் முடிவு செய்வான். எனவே, அனைத்து செயல்களையும் அவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்;நீங்கள் எதைப் பெறச் தகுதியானவர் என்பதை அவனே முடிவு செய்யட்டும்.எப்போது தூய அன்புடனும், முழுமையான பக்தியுடனும், அனைத்தையும் இறைவனிடமே விட்டு விடுகிறீர்களோ, இறைவன் உங்களை பரிபூரணமாகப் பேணிக் காத்திடுவான்.இப்படிப் பட்ட திடமான நம்பிக்கை இன்று மனிதர்களிடம் இல்லை.சோதனைகளை நம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் எதிர் கொண்ட பண்டைய கால தலை சிறந்த பக்தர்கள் இறுதியில் இறை அருளைப் பெற்று, பேரானந்தத்தை அனுபவித்தார்கள்.