azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
It is meaningless to be born as a human being and lead an animal existence. Everyone should live up to the motto - ‘Help ever - hurt never.’ Every educated person should engage oneself in selfless service to the society, with humility and a pure heart. All academic distinctions or even observance of spiritual practices are of little use if there is no love in the heart. The heart is called'Hridaya'in Sanskrit. This term is made up of the two words,‘Hri’and‘Daya’(compassion). The Lord is described asHridyavasi(the Indweller in the heart). Love and Compassion are inherent in every person. Every being must share their love with others selflessly. Failure to share one's love is gross ingratitude to society, to which one owes everything. One should give one's love freely to others and receive love in return. This is the deep significance of human life. (Divine Discourse, 5 Jun 1994.)
ஒரு மனிதனாகப் பிறந்து விட்டு, ஒரு மிருகம் போல வாழ்வது அர்த்தமற்றது. ஒவ்வொருவரும் -- எப்போதும் உதவுங்கள்,ஒருபோதும் தீங்கிழைக்காதீர்கள்- என்ற கோட்பாட்டின் படி வாழ்தல் வேண்டும். படித்த ஒவ்வொருவரும் பணிவு மற்றும் தூய இதயத்துடன் சமுதாயத்திற்குத் தன்னலமற்ற சேவை ஆற்ற வேண்டும். அனைத்து கல்வித் திறன்களும் அல்லது ஆன்மீக சாதனைகளைக் கடைப்பிடிப்பதும் கூட, இதயத்தில் அன்பு இல்லை என்றால், பயனற்றவையே.இதயத்தை சம்ஸ்கிருதத்தில், '' ஹ்ருதயா '' என்பார்கள்.இது இரண்டு வார்த்தைகளால் ஆனது- '' ஹ்ரி '' மற்றும் '' தயா '' ( கருணை). இறைவனே ஹ்ருதயவாஸி, அதாவது இதயத்தில் உறைபவன் என விளக்கப் படுகிறான். அன்பும், கருணையும் ஒவ்வொரு மனிதருள்ளும் இயற்கையாகவே உள்ளவையாகும்.ஒவ்வொரு ஜீவராசியும் தங்களது அன்பை, தன்னலமின்றி பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். தான் பெற்றுள்ள அனைத்திற்கும் இந்த சமுதாயத்திற்கு எல்லா விதத்திலும் கடமைப் பட்டுள்ள ஒருவர், தனது அன்பைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்றி கெட்ட செயலாகும்.ஒருவர் தனது அன்பை தங்கு தடையின்றி பிறருக்கு அளித்து, அன்பை பதிலுக்குப் பெறுதல் வேண்டும்.இதுவே மனித வாழ்க்கையின் ஆழ்ந்த முக்கியத்துவம் ஆகும்.