azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Everyone should so lead life that no pain is caused to any living thing. That is their supreme duty. Also, it is the prime duty of everyone who has had the chance of this human birth, to spare a part of their energies occasionally to prayer, repetition of the Lord's name, meditation, etc. Everyone must equate living with truth, righteousness, peacefulness, and good works that are of service to others. One must be as afraid of doing acts that are harmful to others or deeds that are sinful as one is now afraid to touch fire or disturb a cobra. One must have as much attachment and steadfastness in carrying out good works, in making others happy, and in worshiping the Lord as one now has in accumulating gold and riches. This is the code of conduct(dharma)of all human beings. (Prema Vahini, Ch 65.)
எந்த ஒரு ஜீவராசிக்கும் துன்பம் விளைவிக்காத வகையில், ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த வேண்டும்.மேலும், மனித ஜன்மம் எடுக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒவ்வொருவரின் தலையாய கடமை, தங்களது சக்திகளின் ஒரு பாகத்தை அவ்வப்போது பிரார்த்தனை, இறை நாமஸ்மரணை மற்றும் தியானம் போன்றவற்றிற்காக ஒதுக்குவதாகும்.ஒவ்வொருவரும் வாழ்வது என்பதை சத்யம், தர்மம், சாந்தி, மற்றும் பிறருக்கு சேவை செய்யும் நல்ல காரியங்களோடு ஒப்பிட வேண்டும். ஒரு நெருப்பைத் தொடுவது அல்லது ஒரு நல்ல பாம்பைச் சீண்டுவது ஆகியவற்றிற்கு எந்த அளவு ஒருவர் அஞ்சுவாரோ, அதே போன்று, பிறருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களையோ அல்லது பாவகரமான செயல்களையோ செய்வதற்கு அஞ்ச வேண்டும். இக்காலத்தில் தங்கத்தையும், செல்வத்தையும் குவிப்பதில் ஒருவருக்கு இருக்கும் அதே அளவு பற்றுதலையும், மன உறுதியையும், நற்காரியங்களை ஆற்றுவதிலும்,பிறரை மகிழ்விப்பதிலும், இறைவனை வழிபடுவதிலும் ஒருவர் கொண்டிருக்க வேண்டும். இதுவே அனைத்து மனிதர்களின் தர்மமாகும்.