azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Mine’ and ‘yours’ — these attitudes are only for identification. They are not real; they are temporary. ‘His’(All belongs to the Lord) — that is the truth, the eternal. It is like the headmaster of a school being in temporary charge of the furniture of the school. He has to hand over the items when he is transferred or retired. Treat all things with which you are endowed just as the headmaster treats the furniture. Be always aware that the final checking-up is imminent. Wait for that moment with joy. Be ready for that event. Have your accounts up to date and the balance already calculated to be handed over. Treat all things entrusted to you with care and diligence. (Divine Discourse, Nov 23, 1961.)
''என்னுடையது'', '' உன்னுடையது '' என்ற மனப்பாங்கு எல்லாம் அடையாளம் கண்டு கொள்வதற்காக மட்டுமே.அவை உண்மையானவை அல்ல; இவை தாற்காலிகமானவையே. '' அவனுடையது''( அனைத்தும் இறைவனுடையதே) -என்பதே நித்ய சத்யம் .ஒரு பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் தாற்காலிகமாக, பள்ளியின் மேஜை,நாற்காலிகளுக்கு பொறுப்பு ஏற்பது போன்றதாகும் இது.இந்த பொருட்களை அவர் பிறரிடம், அவர் இடமாற்றம் செய்யப் பட்டாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ, திருப்பித் தந்து விட வேண்டும்.உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள அனைத்தையும்,எப்படி ஒரு தலைமை ஆசிரியர் கருதுகிறாரோ, அவ்வாறே கருதுங்கள்.இறுதிக் கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது என்பதை எப்போதும் உணர்ந்திருங்கள். அந்தத் தருணத்திற்காக சந்தோஷத்துடன் காத்திருங்கள்.அந்த நிகழ்ச்சிக்காகத் தயாராக இருங்கள். உங்களது கணக்கு வழக்குகளை தயாராகவும், திருப்பித் தர வேண்டிய மீதமுள்ளவற்றின் எண்ணிக்கையை முன்பே சரிபார்த்தும் வைத்திருங்கள். உங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள அனைத்தையும் கவனமாகவும், பொறுப்புடனும் கவனித்துக் கொள்ளுங்கள்.