azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Everyone is liable to make mistakes without being aware of it. However bright a fire may be, there will be smoke emanating from it. So also, whatever good a person might do, there will be a minute trace of evil. Make every effort to ensure that the bad or evil is minimised, and good is maximised. You may not succeed in the first attempt. Carefully think over the consequences of whatever you do or talk. In whatever way you want others to honour you, love you, or behave with you, in the same way you should first behave with others, and love and honour them. Then they will reciprocate. Instead, without you honouring or loving others, if you complain that they are not treating you properly, it is surely a wrong conclusion. Those who advise others about true and good conduct must follow the advice themselves. Then there is no need for advice, others would simply learn the lesson by example. (Prema Vahini, Ch 63)
ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே தவறுகள் செய்யக் கூடும்.நெருப்பு எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும், அதிலிருந்து புகை வரத்தான் செய்யும். அதைப் போலவே,ஒரு மனிதர் எவ்வளவு நல்லவற்றைச் செய்தாலும்,அவரிடம் கூட ஒரு இம்மி அளவாவது தீயவற்றின் சுவடு இருக்கத் தான் செய்யும். கெட்டவை அல்லது தீயவற்றை குறைந்த பட்ச அளவிற்குக் குறைப்பதற்கும், நல்லவற்றை அதிக பட்ச அளவு அதிகரிப்பதற்கும் எல்லாவிதமான முயற்சியையும் மேற்கொள்ளுங்கள்.முதல் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற இயலாமல் போகலாம்.நீங்கள் செய்வதன் அல்லது பேசுவதன் விளைவுகளை கவனமாக சிந்தித்துப் பாருங்கள்.நீங்கள் எந்த விதத்தில் மற்றவர்கள் உங்களை மதித்து, அன்பு செலுத்தி அல்லது உங்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதே விதத்தில் முதன் முதலில் நீங்கள் மற்றவர்களுடன் நடந்து கொண்டு, அன்பு செலுத்தி, மதிக்க வேண்டும். பின்னர் அவர்களும் அதே மாதிரி நடந்து கொள்வார்கள்.அதற்கு பதிலாக, நீங்கள் மற்றவர்களை மதிக்காமலும், அன்பு செலுத்தாமலும் இருந்து விட்டு, அவர்கள் உங்களை சரியாக நடத்தவில்லை என்று குறை கூறுவீர்களானால், அது கட்டாயம் ஒரு தவறான முடிவாகும். மற்றவர்களுக்கு உண்மையான மற்றும் நல்ல நடத்தையைப் பற்றி அறிவுரை கூறுபவர்கள், தாங்களே அந்த அறிவுரையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.பின்னர் அறிவுரை கூற வேண்டிய அவசியமே இருக்காது; மற்றவர்கள் இந்தப் பாடத்தை எளிதாக உங்களது உதாரணத்தின் மூலம் கற்றுக் கொண்டு விடுவார்கள்.