azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
In this world, there is no penance higher than fortitude, no happiness greater than contentment, no good deed holier than mercy, and no weapon more effective than patience. Devotees should consider the body as the field and good deeds as seeds. Then with the help of the heart as the farmer, cultivate the name of the Lord to reap the harvest - the Lord Himself. Like cream in milk and fire in fuel, the Lord is in everything. Have full faith in this. As is the milk, so is the cream; so also, as is the spiritual discipline, so is the direct experience(sakshatkara)of the Lord! As a consequence of taking up the Lord’s name, four distinct fruits will be experienced by sincere seekers. They are: company of the noble, truth, contentment and control of the senses. Through whichever of these gates one enters, whether one is a householder, recluse, or a member of any other class, one can reach the Lord without fail. This is certain. (Prema Vahini Ch 60)
இந்த உலகில் உளவலிமையை விட உயர்ந்த தவம், திருப்தியை விடப் பெரிய சந்தோஷம்,தயையை விட அதிகப் புனிதமான நற்செயல், பொறுமையை விடப் பயனுள்ள ஆயுதம் எதுவுமில்லை. பக்தர்கள் இந்த உடலை ஒரு நிலமாகவும், நற்காரியங்களை விதைகளாவும் கருத வேண்டும்.பின் இதயம் என்ற உழவனின் துணை கொண்டு,இறைவன் எனும் பயிரை வளர்த்து, அவனையே அறுவடையாகப் பெறுங்கள்.பாலில் வெண்ணெயைப் போல, எரிபொருளில் நெருப்பைப் போல இறைவன் ஒவ்வொன்றிலும் உள்ளான். இதில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள்.பால் எப்படியோ, வெண்ணெயும் அப்படியே;அதைப் போலவே, ஆன்மீக சாதனை எப்படியோ, அப்படியே அமையும் இறைவனின் சாக்ஷாத்காரமும் ! இறைவனின் திருநாமத்தை எடுத்துக் கொள்வதன் விளைவாக, நான்கு விதமான குறிப்பிட்ட பலன்களை நேர்மையான ஆன்மீக சாதகர்கள் அனுபவிப்பார்கள்.அவையே,நல்லோர்களின் நட்பு வட்டம், சத்தியம், திருப்தி, மற்றும் புலனடக்கம்.இவற்றில் எந்தக் கதவுகளின் வழியாக ஒருவர் நுழைந்தாலும், அவர் கிருஹஸ்தரானாலும், சன்யாசியானாலும்,அல்லது எந்தக் குலத்தின் அங்கத்தினரானாலும், இறைவனைக் கண்டிப்பாக அடைவார்கள். இது உறுதி.