azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Jul 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
You come to Puttaparthi to strengthen your relationship with the Divine. Hold on to it firmly. Put into practice at least one thing you learn from here. It is not enough to chant the names of God. God must be installed in the heart. Make your conscience your guide and preceptor. That will promote true devotion. All external paraphernalia will not help you. There are four mottos which all devotees should follow: (1) Avoid bad company (2) Welcome association with good persons (3) Remember always the transient and the permanent, and (4) Ceaselessly engage yourself in meritorious acts. It is through the above that you become good. Remember, the essence of all scriptures is: ‘Help ever; hurt never.’ If the above basic rules are followed, all countries will be happy and peaceful. Like India, every country is a part of the mansion of planet earth. When we have this broad vision, humanity will be one in spirit. (Divine Discourse, 23 Nov 1997.)
நீங்கள் தெய்வீகத்துடன் உங்களது உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காகப் புட்டபர்த்திக்கு வருகிறீர்கள்.அதை இறுகப் பற்றிக் கொண்டு இருங்கள்.இங்கு கற்றுக் கொள்வதில் ஒன்றையாவது நடைமுறைப் படுத்துங்கள்.இறைவனது திருநாமங்களை உச்சரித்தால் மட்டும் போதாது.இறைவனை உங்களை இதயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். உங்களது மனச்சாட்சியை உங்களது வழிகாட்டியாகவும் ,குருவாகவும் கொள்ளுங்கள். அது உண்மையான பக்தியை வளர்க்கும். வெளிப்படையான படாடோபங்கள் உங்களுக்கு உதவாது. அனைத்து பக்தர்களும் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு கோட்பாடுகள் உள்ளன. 1) தீயவரின் நட்பு வட்டத்தைத் தவிர்த்து விடுங்கள். 2) நல்லோருடன் உறவு வைத்துக் கொள்வதற்கு வரவேற்பு அளியுங்கள். 3) நிலையற்றது மற்றும் நிரந்தரமானது எது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 4) நற்செயல்களில் உங்களை இடையறாது ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.இவைகளின் வழியாகத் தான் நீங்கள் நல்லவர்களாக ஆவீர்கள். அனைத்து சாஸ்திரங்களின் சாரமும், '' எப்போதும் உதவுங்கள்; ஒரு போதும் தீங்கிழைக்காதீர்கள். '' என்பதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேற்கூறப்பட்ட அடிப்படை நெறிகளைக் கடைப்பிடித்தால் அனைத்து நாடுகளும் சாந்தி, சந்தோஷங்களுடன் இருக்கும்.இந்தியாவைப் போலவே, ஒவ்வொரு நாடும் இந்த உலகம் என்னும் மாளிகையின் அங்கமே. இப்படிப் பட்ட பரந்த மனப்பாங்கு நமக்கு இருக்கும் போது மனித குலம் அனைத்தும் உணர்வு நிலையில் ஒன்றாக இருக்கும்.