azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Deho Devalaya - The body is the temple of the Lord.You are going about your daily journey with a temple where God is present in your innermost shrine. The body is not a mass of flesh and bone. It is a medium for sacred vibrations (mantras) which save you when they are meditated upon. The body is a sacred instrument earned after long ages of struggle. It is equipped with reason and emotion, and is capable of being used for deliverance from grief and evil. Honour it as such; keep it in good condition so that it might serve that high purpose. Maintain it even more carefully than the brick and mortar houses you live in, and always preserve the conviction that it is a divine instrument and nothing more. Use it for that pure purpose for which it has been designed and gifted to you. (Divine Discourse, 3rd Feb 1964)
தேஹோ தேவாலயா -இந்த உடலே இறைவன் உறையும் ஆலயம். நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கைப் பயணத்தை உங்களது உள்ளார்ந்த கற்பக்ருஹத்தில் கொலு வீற்றிருக்கும் இறைவன் உறையும் ஆலயத்துடனேயே நடத்துகிறீர்கள்.இந்த உடல் தசை மற்றும் எலும்பாலான பிண்டம் மட்டும் அல்ல.எவற்றை தியானித்தால், நீங்கள் காப்பாற்றப்படுவீர்களோ,அந்த புனிதமான மந்திரங்களின் இருப்பிடமும் அதுவே ஆகும். இந்த உடல் பலஜன்மங்களில் பாடுபட்டுப் பெற்ற ஒரு புனிதமான கருவி ஆகும். அது பகுத்தறிவும், உணர்வுகளும் கொண்டது; துக்கம் மற்றும் தீங்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்குப் பயன்படுத்தத் தகுதி வாய்ந்தது.அதை அவ்வாறே போற்றுங்கள்; அந்த உயர்ந்த குறிக்கோளை அடைவதற்கு ஏற்றவாறு அதை நல்ல நிலையில் வைத்திருங்கள்.கல்லாலும், மண்ணாலும் கட்டப் பட்ட நீங்கள் வாழும் வீடுகளைக் காட்டிலும் அதிக கவனத்துடன் அதை பாரமரியுங்கள்; அது ஒரு புனிதமான கருவியே அன்றி வேறில்லை என்ற நம்பிக்கையை எப்போதும் கொண்டிருங்கள். எந்தத் தூய்மையான குறிக்கோளுக்காக வடிவமைக்கப் பட்டு உங்களுக்குப் பரிசாகக் கொடுக்கப் பட்டுள்ளதோ, அதற்கே அதைப் பயன்படுத்துங்கள்.