azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Lord Krishna incarnated to destroy evil in a handful of individuals. But now, the evil qualities are not identifiable in a small group of people. They are widespread everywhere. The scorpion has poison only in its tail; the cobra only in its fangs; but people have poison all over them! They have it in their eyes, their tongues, their mind, their intelligence, their gait, their brain – just about everywhere. You may ask, “Oh! When will this poison be counteracted and destroyed?” When the Lord enters your heart, that is the very objective He will accomplish. Offer unto the Lord, the ‘flower of your heart’(Hrudaya Pushpam),after cleansing it thoroughly of the dust and pests (desire, anger, envy, doubt, etc.) that infest it. Without effort, can there be victory in any field? Can you become a high ranking official without the appropriate qualifications of scholarship, talent, experience and wisdom? So persevere and succeed! (Divine Discourse, 14 Jan 1964.)
ஒரு சில மனிதர்களில் இருந்த தீயவற்றை அழிப்பதற்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.ஆனால் இன்றோ,ஒரு சிறிய மனிதக் கூட்டத்தில் மட்டுமே தீய குணங்களை இனம் கண்டு கொள்ள முடிவதில்லை. அவை எங்கும் பரவியுள்ளன.தேளுக்கு விஷம் அதன் கொடுக்கில் உள்ளது; நல்ல பாம்பிற்கோ அதன் பல்லில் உள்ளது;ஆனால் மனிதர்களிடமோ அது அவர்கள் முழுவதும் இருக்கிறது ! அவர்களது கண்களில்,நாக்கில்,மனதில்,புத்தியில், நடையில், மூளையில் - பார்த்தால் எல்லா இடத்திலும் அது இருக்கிறது. நீங்கள் கேட்கக் கூடும்,'' ஓ ! எப்போது இந்த விஷம் முறிக்கப் பட்டு அழிக்கப் படும் ?'' என்று.எப்போது இறைவன் உங்களது இதயங்களில் நுழைகிறானோ, அந்தக் குறிக்கோளைத் தான் அவன் சாதிக்கிறான். அதைப் பீடிக்கும் அழுக்கு மற்றும் பூச்சிகளைக் (காம,க்ரோத, லோப, மோஹ, மத,மாத்ஸர்யங்கள் போன்றவை) களைந்து முழுவதுமாகத் தூய்மையாக்கி, உங்களது ஹ்ருதய புஷ்பம் என்ற மலரை இறைவனுக்கு சமர்ப்பியுங்கள். முயற்சி செய்யாமல் எந்தத் துறையிலாவது வெற்றி காண முடியுமா? தேவையான கல்வி, திறமை, அனுபவம் மற்றும் ஞானம் இல்லாமல், நீங்கள் ஒரு உயர் பதவியை அடைய முடியுமா? எனவே, விடாமுயற்சி செய்து வெற்றி பெறுங்கள் !