azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The Master comes to save not one good person from illusion, but the whole of mankind. He assumes a Form that people can love, appreciate and revere. He gives joy and courage by speaking your language. The only blemish that comes in between your mind and the Master is illusion. Illusion is like a fierce dog that will not allow anyone to approach the Master. You can manage to bypass it by calling out to the Master loudly so that He Himself comes down and accompanies you to His home. That is to say, you must win the Lord’s Grace to attain His proximity(Saameepyam).Illusion is the Lord’s pet, so it will not harm you if the Lord orders it to desist from harming you. So just as you give the goldsmith a broken or a dented ornament and receive a fine jewel back, entrust your mind to the Lord. It certainly needs repair, if not complete reconstruction. (Divine Discourse Jan 1, 1964)
இறைவன் ஒரே ஒரு நல்ல மனிதனை ,மாயையிலிருந்து காப்பதற்காக வருவதில்லை, மாறாக மனித குலத்தையே காப்பதற்காக வருகிறான். மனிதர்கள் நேசித்து,பாராட்டிப் போற்றுவதற்குத் தகுந்த ஒரு ரூபத்தை ஏற்று வருகிறான்.அவன் உங்களது பாஷையைப் பேசி ஆனந்தமும்,தைரியமும் அளிக்கிறான்.உங்களுக்கும் ,இறைவனுக்கும் இடையில் வரும் ஒரே களங்கம் மாயைதான். மாயை, தனது எஜமானனை எவரும் அண்டவிடாதபடி செய்யும் ஆக்ரோஷமான ஒரு நாயைப் போன்றது. இறைவனை உரக்கக் கூப்பிடுவதன் மூலம், நீங்கள் அதனைத் திசை திருப்பி விடலாம்; பின்னர் இறைவனே நேரில் வந்து உங்களைத் தன்னுடனேயே, அவனது இல்லத்திற்கு அழைத்துச் செல்வான். அதாவது, நீங்கள் இறைவனது அருளைப் பெறுவதன் மூலம் அவனது அருகாமையைப் (ஸாமீப்யம்) பெற வேண்டும். மாயை இறைவனது செல்லப் பிராணி; எனவே, அவன் ஆணையிட்டால், அது உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. நீங்கள் எவ்வாறு ஒரு உடைந்த அல்லது நசுங்கிய தங்க நகையைப் பொற் கொல்லரிடம் கொடுத்து, அழகான ஒரு ஆபரணத்தைப் பெறுகிறீர்களோ, அவ்வாறே உங்களது மனதை இறைவனிடம் கொடுத்து விடுங்கள். முழுவதுமாக புனருத்தாரணம் செய்யப் பட வேண்டாமல் இருந்தாலும் கூட, கட்டாயம் பழுது பார்க்கப் பட வேண்டிய ஒன்றாகத் தான் அது இருக்கிறது.