azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
What is the use in planning a well when the house is on fire? Where is the time to dig now? When will water become available? When is the fire to be extinguished? It is an impossible task! If, at the very start, a well was ready, how helpful it would be on such critical occasions! Beginning to contemplate on God during the last moments is like beginning to dig the well when the house is on fire. Therefore equip yourself right now, by contemplating on God off and on, so that it will stand you in good stead when the end approaches. Start today the spiritual discipline that has to be done tomorrow! Start now what has to be done today! One doesn’t know what is in store the next moment; therefore there should be no delay in engaging in spiritual practices. For this physical stamina is also necessary, so the body has to be tended to, though over-tending causes damage. To the degree that is essential, the body should be looked after with great care. (Prema Vahini, Ch 41)
வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது,கிணறு தோண்டத் திட்டமிடுவதால் என்ன பயன்? தோண்டுவதற்கு இப்போது ஏது நேரம்? எப்போது தண்ணீர் கிடைக்கும்?நெருப்பை எப்போது அணைப்பது? இது இயலாத காரியம் ! ஒரு வேளை ஆரம்பத்திலேயே ஒரு கிணறு தயாராக இருந்திருந்தால், இப்படிப் பட்ட இக்கட்டான வேளையில் எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும்?கடைசி காலங்களில் இறைவனைத் தியானிக்க ஆரம்பிப்பது , வீடு தீப்பற்றி எரியும்போது கிணறு தோண்டுவதைப் போலாகும். எனவே, இப்போதே, இறைவனை அடிக்கடித் தியானம் செய்து உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள், ஏனெனில், அதுவே இறுதித் தருணங்களில் உங்களுக்குக் கை கொடுக்கும். நாளை செய்வதாக இருக்கும் ஆன்மீக சாதனையை இன்றே தொடங்குங்கள் ! இன்று செய்வதாக இருப்பதை இப்போதே ஆரம்பியுங்கள். அடுத்த நொடியில் என்ன இருக்கிறது என்பதை எவரும் அறியார்; எனவே ஆன்மீக சாதனைகளைத் தொடங்குவதில் எந்த விதமான தாமதமும் இருக்கக் கூடாது. இதற்கு உடல் திறன் அவசியம்; எனவே, அளவுக்கு மீறிக் கவனம் செலுத்தினால் தீங்கு விளைவித்தாலும் கூட, உடலைப் பராமரிக்க வேண்டும்.தேவைக்குத் தகுந்த அளவு, மிகுந்த கவனத்துடன் உடலைப் பராமரிக்க வேண்டும்.