azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 04 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 04 Jun 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

They are, according to the Veda, four stages - the waking, dream, deep sleep, and the liberated stage(turiya).In the first stage, one is awake to the objective world and is oriented outward. Since one identifies with the gross body complex at this stage, the experiences are also gross. In the dream the self is in-faced. Reactions, responses, and experiences are all self-contained. They do not belong to the area outside of oneself. Next comes deep sleep(sushupti).This stage is free from even dreams. There is no feeling of either separation or identity, the particular or the universal, experiencer or experience. There is only theAtma,in which one has temporarily merged. In the fourth step(Turiya),the individual is no more so. It has attained the basic truth of life and of creation. Those who have reached this step no longer have concern with the individual self. These are four states one experiences, but they are also stages one has to go through in search of Self-Knowledge. (Sutra Vahini, Ch 6)
வேதங்களின் படி,நான்கு நிலைகள் உள்ளன- விழிப்பு,கனவு,ஆழ்ந்த உறக்கம் மற்றும் துரியா என்ற தன்னை உணர்ந்த நிலை.முதல் நிலையில் ஒருவர் பொருட்களாலான இந்த உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன், வெளிப்படையான பார்வையைக் கொண்டவராக இருக்கிறார். இந்த நிலையில் ஒருவர் தன்னை ஸ்தூலமான சரீரத்தோடு இனம் கண்டு கொள்வதால் அவரது அனுபவங்களும் நிதர்சனமானவையாக உள்ளன.கனவு நிலையில் ஆத்மா உட்பார்வை கொண்டதாக உள்ளது. எதிர்செயல்கள்,பதில்கள் மற்றும் அனுபவங்கள் தனக்குள் அடங்கியதாக உள்ளன.அவை ஒருவரை விட்டு வெளியில் உள்ள பிரதேசத்திற்கு உட்பட்டவையாக இருப்பதில்லை. அடுத்த நிலையே சுஷுப்தி என்ற ஆழ்ந்த உறக்க நிலை. இந்த நிலையில் கனவுகள் கூட இருப்பதில்லை. பிரித்துப் பார்ப்பது அல்லது இனம் கண்டு கொள்வது, குறிப்பிட்டவை அல்லது பிரபஞ்சமயமானவை,அனுபவிப்பவர் அல்லது அனுபவம் போன்றவற்றின் உணர்வுகள் இருப்பதே இல்லை.தாற்காலிகமாக ஒருவர் ஒன்றரக் கலந்து விட்ட ஆத்மா மட்டுமே அங்கு உள்ளது.நான்காவது நிலையான துரியாவில், தனி மனிதனே இருப்பதில்லை.அவர் வாழ்க்கை மற்றும் சிருஷ்ட்டியின் அடிப்படை உண்மையை அடைந்து விடுகிறார்.இந்த நி¨லையை எய்தியவருக்கு, தனிப்பட்ட ஜீவனைப் பற்றிய கவலை இனிமேல் இல்லை. இந்த நான்கு விதமான அனுபவ நிலைகள் உள்ளன; ஆனால் , இவைகளை ஆத்ம ஞானத்தைத் தேடும் ஒருவர் அனுபவித்தே ஆக வேண்டும்.