azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Vikshepa is an affliction of the mind that consists of worldly distractions; various spiritual exercises (sadhanas) are undertaken to overcome it and realise the Divine. The sadhanas include meditation, concentration and performance of good deeds for achieving purity of mind. When one succeeds in overcoming Vikshepa, one is confronted with avarana (akin to a thick covering in which one is enveloped). This covering is known as maya (delusion). It envelops everything in the universe. The eyes with which one can see everything that is outside cannot see themselves. Likewise, Maya, which reveals the entire universe, cannot reveal the Divine. Because we are enveloped in Maya, we seek worldly pleasures and do not seek our own Divine essence. ‘Yaddhrushyam than-nashyathi - Whatever is perceptible, is perishable.’ In the pursuit of fleeting and impermanent pleasures, we are throwing away the permanent, the unchanging and the real elements in human life. (Divine Discourse, 17 March 1983)
உலகியலான திசை திருப்பங்களால் பீடிக்கப் படும் மனதின் நோய் விக்ஷேபா ஆகும்; இதை வெல்வதற்கும், இறைவனை உணர்வதற்கும் பலவிதமான ஆன்மீக சாதனைகள் மேற் கொள்ளப் படுகின்றன. தியானம்,மனக்குவிப்பு, மனத் தூய்மை அடைவதற்காக நற்காரியங்களைச் செய்தல் ஆகிய ஆன்மீக சாதனைகள் இவற்றில் அடங்கும்.எப்போது ஒருவர் விக்ஷேபத்தை வெல்வதில் வெற்றி காண்கிறாரோ அவர் அவரனாவை (ஒருவரை சுற்றிச் சூழ்ந்து கொள்ளும் தடிமனான மூட்டத்தைப் போன்ற ஒன்று) எதிர் கொள்ள வேண்டி உள்ளது. இந்த மூட்டமே மாயை எனப்படுகிறது.இது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் சூழ்ந்து விடுகிறது. எந்தக் கண்களால் வெளியில் இருக்கும் ஒவ்வொன்றையும் காணுகின்றோமோ, அவை தங்களையே பார்த்துக் கொள்ள முடியாது.அதைப் போலவே,இந்த பிரபஞ்சம் அனைத்தையும் காட்டும் மாயை, தெய்வீகத்தை வெளிப்படுத்த முடியாது. நாம் மாயையினால் சூழப்பட்டிருப்பதால், உலகியலான இன்பங்களை நாடி, நமக்கே சொந்தமான தெய்வீக சாரத்தை நாடாமல் இருக்கிறோம். '' யத்ருஷ்யம் தன் நஷ்யதி - காண்பவை அனைத்தும் அழிபவையே.'' கணப்பொழுதில் மறையும்,நிலையற்ற இன்பங்களின் தேடுதலில், நாம் மனித வாழ்க்கையின் சாஸ்வதமான,மாற்றமே இல்லாத உண்மையான கூறுகளைத் தூக்கி எறிந்து விடுகிறோம்.