azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
TheGayatri mantrais the royal road to Divinity. There is no fixed time or regulation for reciting it. Nevertheless, the young celibates(Brahmacharis)would do well to recite it during the morning and eveningSandhya(twilight hours) to derive the greatest benefit. However because the Divine is beyond time and space, anytime and anyplace is appropriate for repeating God's name. The Bhagavata declares:"Sarvadaa, sarvatra, sarva kaleshu Hari chintanam- Contemplate on God always, at all places and at all times." You must learn to think of God in whatever you see, whatever you do and whatever you touch. You must realise that you are playing temporary roles on the cosmic stage. You must get back to your true Divine Selves when the play is over. By regularly reciting theGayatri,you must purify your lives and be an example to the world in righteous living. (Divine Discourse, 17 Mar 1983.)
காயத்ரி மந்திரம் தெய்வீகத்திற்கான ராஜபாட்டையாகும்.அதை உச்சரிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரமோ அல்லது உச்சரிக்கும் முறையோ கிடையாது. இருந்தாலும், தலை சிறந்த பயனைப் பெறுவதற்கு, பிரம்மச்சாரிகள் காலையிலும், மாலையிலும் சந்தியாகாலத்தில் அதனை ஜபம் செய்வது நல்லது. இருந்தாலும் தெய்வீகம் என்பது காலத்திற்கும்,தேசத்திற்கும் அப்பாற்பட்டது என்பதால், எந்த நேரமும்,எந்த இடமும் இறை நாமஸ்மரணை செய்வதற்கு உகந்ததே. '' ஸர்வதா, ஸர்வத்ர, ஸர்வகாலேஷூ ஹரி சிந்தனம்'' - இறைவனை எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் தியானம் செய்யுங்கள் ''. நீங்கள் காணும் ,செய்யும், தொடும் எதுவாக இருந்தாலும், அதில் இறைவனை நினைவு கூறுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த பிரபஞ்ச நாடக மேடையில் தாற்காலிகமான பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை கட்டாயம் உணர வேண்டும்.இந்த நாடகம் முடிந்தவுடன், நீங்கள் உங்களது உண்மையான தெய்வீக நிலைக்குத் திரும்பிச் சென்றே ஆக வேண்டும். தவறாது காயத்ரி மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம் உங்களது வாழ்க்கையைத் தூய்மைப் படுத்திக் கொண்டு, தார்மீகமான வாழ்க்கை வாழுவதில் இந்த உலகத்திற்கு ஒரு உதாரணமாக நீங்கள் திகழ வேண்டும்.