azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
So long as a person is puffed up with pride, none, not even their spouse and children will love them. You must shed your ego and arrogance, even to be loved by your own family. You will definitely suffer grief and misery as long as you are prone to anger. It is only when you give up anger, you can be happy. So long as you go on multiplying your desires, you will continue to be in want. Control your desires, you will attain prosperity. Greed makes a person unhappy and miserable. When greed and miserliness are given up, you can lead an enjoyable and peaceful life. The human race, the whole world and the objects therein are interrelated by the bond of love. God is love and resides in the heart of every one as the Embodiment of love. Based on this truth we pray,"Samastha-Loka-Sukhino Bhavanthu"(May all the beings in all the worlds be happy).(Divine Discourse, Jul 17, 1997.)
ஒருவர் தற்பெருமையால், பூரிப் பொங்கியிருக்கும் வரை,ஒருவர் கூட, ஏன், அவரது மனைவி , மக்கள் கூட அவரை நேசிக்க மாட்டார்கள். உங்களது சொந்தக் குடும்பம் கூட உங்களை நேசிக்க வேண்டும் என்றால், நீங்கள் அஹங்காரத்தையும், திமிரையும் விட்டு விட வேண்டும். நீங்கள் கோபத்திற்கு ஆளாகும் வரை, துன்பமும்,துயரமும் அடைவீர்கள். நீங்கள்கோபத்தை விட்டால் மட்டுமே, சந்தோஷமாக இருக்க முடியும். நீங்கள் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டே போகும் வரை, தேவைகளிலேயே தொடர்ந்து இருப்பீர்கள். உங்களது ஆசைகளைக் கட்டுப் படுத்துங்கள், நீங்கள் வளம் பெறுவீர்கள்.பேராசை ஒரு மனிதனை மகிழ்ச்சி அற்றவராகவும், துயரம் கொண்டவராகவும் ஆக்கி விடும். பேராசையையும்,கஞ்சத்தனத்தையும் விட்டு விடும் போது, நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் சாந்தி நிறைந்த வாழ்க்கையை நடத்த முடியும்.இந்த மனித குலமும்,இந்த உலகனைத்தும் மற்றும் அதில் உள்ள பொருட்களும் ப்ரேம பந்தத்தால் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டு உள்ளன. இறைவனே அன்பு, அவனே ஒவ்வொருவரின் இதயத்திலும் அன்பின் உருவாக உறைகிறான். இந்த உண்மையின் அடிப்படையில் தான் நாம்,'' ஸமஸ்த லோகாஸ் ஸுகினோ பவந்து''' ( அனைத்து உலகங்களிலும் உள்ள அனைவரும் இன்புற்று இருக்கட்டும் ) என்று பிரார்த்திக்கிறோம்.