azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
People worship the Supreme Lord(Paramatma)as existing in some faraway place – say Ayodhya or Dwaraka and nowhere else, or as found in places where some image or picture exists and nowhere else. They worship that form itself as complete(Purna).Of course, it is not wrong to do so. What is wrong is to proclaim that only their belief is the truth, that the names and forms that they have ascribed are the only names and forms of the Divine, and that all other forms and names are worthless and inferior. It should be realized that the names and forms that are the ideals of others are as dear and sacred to those others as such names and forms are to oneself. Everyone should acquire the vision that all forms of the ideal are equally valid and true, without giving room to senseless hatred. Without internalizing this wisdom, it is impossible to realize the Divine.(Prema Vahini, Ch 36)
மனிதர்கள் பரமாத்மாவை,வெகு தொலைவில் உள்ள அயோத்யா அல்லது துவாரகா போன்ற இடங்களைத் தவிரவோ அல்லது ஏதோ ஒரு சிலை அல்லது படம் இருக்கும் இடங்களைத் தவிரவோ அன்றி வேறெங்கும் இல்லை என்பது போலக் கருதி வழிபடுகிறார்கள். அவர்கள் அந்த ரூபமே பரிபூரணமானது எனக் கருதி வழிபடுகிறார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை தான்.தவறு எது என்றால், அவர்களது நம்பிக்கை மட்டுமே உண்மையானது, அவர்கள் போற்றும் நாம, ரூபங்கள் மட்டுமே இறைவனுடையது, மற்ற அனைத்து நாம , ரூபங்களும் மதிப்பற்றவை, தாழ்ந்தவை என்று பறை சாற்றுவது தான். எந்த அளவு சில நாம ரூபங்கள் ஒருவருக்குப் பிரியமானதாகவும், புனிதமானதாகவும் இருக்கிறதோ, அதே அளவு பிறர் சீராகக் கருதும் நாம, ரூபங்கள் அவர்களுக்கு பிரியமானதாகவும், புனிதமானதாகவும் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். ஒவ்வொருவரும், இறைவனின் அனைத்து ரூபங்களும் எந்த விதமான அறிவற்ற த்வேஷத்திற்கும் இடம் அளிக்காமல், சமமான அளவு சரியானதும் உண்மையானதும் என்ற திருஷ்ட்டியைப் பெற வேண்டும். இந்த ஞானத்தை உள் மனதில் ஏற்றுக் கொள்ளாமல், இறைவனை உணருவது என்பது இயலாததாகும்.