azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 18 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 18 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
The scriptures are as affectionate as a mother. They teach lessons like a mother would do for her children, in conformity with the level of intelligence and the needs of time and circumstance. A mother with two children gives the strong and healthy one every item of food for which it clamours, but she takes great care not to overfeed the unwell child and gives it only items that can restore it soon to health. Can we, on that account, accuse mother of being partial to one and prejudiced against the other in conferring love? Scriptures also teach you the secret and value of work(karma).All must be instructed on how to transform work into beneficial activity. Yet, work is not all. Human life lasts but a moment; it is a bubble on water. Upon this ephemeral bubble of life, do not build a structure of desires and attachments. Wisdom warns that it might collapse or crumble any moment.(Sutra Vahini, Ch 4.)
சாஸ்திரங்கள் ஒரு தாயைப் போன்ற பரிவுணர்வு கொண்டவை.தனது குழந்தைகளின் புத்தியின் தரம், காலம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு கற்பிக்கும் ஒரு தாயைப் போல, அவை பாடங்களை போதிக்கின்றன. இரண்டு குழந்தைகளை உடைய தாய் , வலுவாக உள்ள ஒரு குழந்தைக்கு அது வேண்டுகின்ற ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் தருகிறாள்; ஆனால் உடல் நலம் குன்றிய மற்றொரு குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவு ஊட்டாதிருப்பதில் மிக அதிகமான கவனம் செலுத்தி, அதன் ஆரோக்கியம் விரைவாக நல்ல நிலைக்குத் திரும்புவதற்குத் தேவையானவற்றை மட்டுமே அளிக்கிறாள். அதை வைத்துக் கொண்டு, அந்தத் தாயை, அன்பு செலுத்துவதில் அவள் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் பாரபக்ஷமாக இருக்கிறாள் என்று குறை கூற முடியுமா? சாஸ்திரங்கள் கர்மாவின் ரகசியத்தையும்,மதிப்பையும் கூட போதிக்கின்றன. அனைவருக்கும் எவ்வாறு கர்மாவை பயனுள்ள ஒரு காரியமாக மாற்றுவது என்பது பற்றி அறிவுறுத்தப் பட வேண்டும். ஆனால் கர்மாவே அனைத்தும் ஆகி விடாது.மனித வாழ்க்கை தாற்காலிகமானது; அது தண்ணீர் மீதுள்ள ஒரு நீர்க் குமிழி போன்றது.இந்த நிலையற்ற வாழ்க்கை எனும் நீர்க்குமிழி மீது ஆசா, பாசங்களின் ஒரு மாளிகையைக் கட்டி விடாதீர்கள். எந்தத் தருணத்திலும் அது நிலை குலைந்து, சிதைந்து விடும் என ஞானம் எச்சரிக்கிறது.