azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Where have your good old human qualities gone? Truth, tolerance, morality, discipline - when would you accept them? Arise, awake! Establish the Kingdom Divine(Rama-Rajya),resplendent with mansions of truth, right conduct, and peace. Remember and learn from the rule of divine personages, and their characteristics. Quench the burning flames of ignorance, peacelessness, injustice, and envy with the waters of love, forbearance, and truth. Love your fellow brethren. Develop the feeling of mutuality. Sweep away all jealousy and anger. All of you must realise your own faults and understand that there is no use in searching for faults in others. It is a mere waste of time; it also breeds quarrels. So give up that trait. If you miss this opportunity, when will you ever do it? Don’t yield to dejection, but put an end to all the unrighteousness activities of your past. Repent sincerely and tread the path of prayer to God and doing good deeds, and develop brotherly love. (Prema Vahini Ch 34.)
உங்களது பழைய நல்ல மனிதப் பண்புகள் எங்கே போய்விட்டன? சத்யம், சகிப்புத் தன்மை, நல்லொழுக்கம்,கட்டுப்பாடு - இவற்றை எல்லாம் எப்போது ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?எழுமின் ,விழுமின் !சத்யம், தர்மம், சாந்தி என்ற மாளிகைகளால் ஒளி விட்டுத் திகழும் ராம ராஜ்யத்தை நிறுவுங்கள். தெய்வீக மனிதர்களின் சட்டங்கள் மற்றும் குணாதிசியங்களிலிருந்து கற்றுக் கொண்டு, நினைவில் கொள்ளுங்கள்.அறியாமை,சாந்தியின்மை, அநீதி மற்றும் பொறாமை என்ற கொழுந்து விட்டு எறியும் நெருப்புப் பிழம்புகளை அன்பு,பொறுமை மற்றும் சத்தியம் என்ற நீரை ஊற்றி அணையுங்கள்.உங்கள் சக மனிதர்களை நேசியுங்கள், பரஸ்பர உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். பொறாமை மற்றும் கோபத்தை துடைத்து எறியுங்கள்.நீங்கள் அனைவரும் உங்களது குறைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்; பிறரிடம் குறைகளைத் தேடுவதில் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது நேரத்தை வீணடித்து, சண்டை, சச்சரவுகளை உருவாக்குகிறது.எனவே, அந்த குணத்தை விட்டொழியுங்கள். இந்த வாய்ப்பை இழந்து விட்டால், நீங்கள் எப்போதுதான் செய்யப் போகிறீர்கள்? மனச் சோர்விற்கு இடமளிக்காதீர்கள்; ஆனால் உங்களது கடந்த காலத்தின் அதர்மமான அனைத்து செயல்களுக்கும் முடிவு கட்டுங்கள். உளமாறப் பச்சாதாபப் பட்டு, இறை வழிபாட்டின் பாதையில் சென்று, நற்செயல்களை ஆற்றி, சகோதர ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.