azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Every living being starts on food and yearns slowly to reach the peak of spiritual bliss. Let all your efforts and undertakings be directed to the acquisition of spiritual bliss. The Taithiriya Upanishad clearly elucidates spiritual bliss as the urge for birth, growth, decay, and death. It calls out that all are born in spiritual bliss, will live for it, and will die in order to attain it. However how canBrahmanbe spiritual bliss(ananda)?Scriptures clarify,‘Om ithyekaaksharam Brahman - Om,the one imperishable letter isBrahman.’ It is also said,Atma(Divine Self in individual) isBrahman(Divine). Therefore the three termsAtma, Brahman,andOmare all indistinguishably the same. The Scriptures(Brahma Sutras)reveal that the outer universe, which has Divine(Brahman)as the base and the inner universe are identical and cannot be differentiated. (Sutra Vahini, Ch 2.)
ஒவ்வொரு ஜீவராசியும் அன்னத்திலிருந்து ஆரம்பித்து,மெதுவாக ஆன்மீக ஆனந்தத்தின் சிகரத்தையே அடைய முயலுகின்றன. உங்களது அனைத்து முயற்சிகளும்,செயல்களும் பரமானந்தத்தைப் பெறுவதை நோக்கிச் செலுத்தப் படட்டும். தைத்ரீய உபநிஷதம் தெளிவாக, பரமானந்தமே பிறப்பு, வளர்ப்பு, சிதைவு மற்றும் இறப்பிற்கான உந்துதல் என்று விளக்குகிறது. அது, அனைவரும் பரமானந்தத்தில் பிறக்கிறார்கள், அதற்காகவே வாழ்கிறார்கள்,அதைப் பெறுவதற்காகவே இறக்கிறார்கள் என்று பறை சாற்றுகிறது.அப்படி என்றால் பரப்பிரம்மம் எவ்வாறு பரமானந்தமாக இருக்க முடியும்? வேதங்கள், '' ௐ இத்யேகாக்ஷரம் ப்ரம்மன் '' அதாவது ௐ என்ற ப்ரணவமே அழிவற்ற ப்ரப்பிரம்மம் என்று விளக்குகின்றன.மேலும் ஆத்மாவே பரப்பிரம்மம் என்றும் கூறப்படுகிறது. எனவே, ஆத்மா, ப்ரம்மன் மற்றும் ௐ என்ற மூன்று வார்த்தைகளும் தனித்தனியானவை அல்லாத ஒன்றே. ப்ரம்ம சூத்திரங்கள்,, பரப்பிரம்மத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான பிரபஞ்சமும், உள்ளார்ந்த ஆத்ம பிரபஞ்சமும், பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன.