azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 12 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 12 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is eternally stalked by death. Yet people don’t tolerate the very mention of the word ‘death’. It is deemed inauspicious to hear that word. Anything maybe uncertain, death is certain. It is impossible to change that law. However insufferable it is, every living thing received a ticket to death at birth and every moment is proceeding nearer and nearer to it. Thesamsara(life) train you are journeying on is taking you to that destination, whether you sit quiet or lie down or read or meditate or sing in the journey. Recognise this truth and turn your mind over to good mental tendencies(samskaras).Everyone must examine themselves rigorously, spot defects, and endeavour to correct them. When people uncover and realise their own defects, it is like being reborn. People then start anew, from a new childhood. This is the genuine moment of awakening. (Prema Vahini, Ch 27.)
மரணம் எப்போதும் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் '' மரணம்'' என்ற வார்த்தையைச் சொல்வதைக் கூட மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.இந்த வார்த்தையைக் கேட்பதே அமங்களகரமானது எனறு கருதப் படுகிறது. எது வேண்டுமானாலும் நிச்சயமற்றதாக இருக்கலாம்; ஆனால் மரணம் நிச்சயம்.இந்தச் சட்டத்தை மாற்றுவது இயலாத காரியம்.எவ்வளவு தான் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசியும் பிறப்பின் போதே, மரணத்திற்கான சீட்டைப் பெற்றுள்ளன; ஒவ்வொரு தருணமும் அவைகளை அதற்கு மேலும் மேலும் அருகாமையில் இட்டுச் சென்று கொண்டு தான் இருக்கின்றது.நீங்கள் பயணம் செய்யும் வாழ்க்கை என்ற புகைவண்டி, பயணத்தின் போது,நீங்கள் சும்மா இருந்தாலும், படுத்துக் கொண்டு இருந்தாலும்,படித்துக் கொண்டு இருந்தாலும்,தியானம் செய்து கொண்டு இருந்தாலும், பாடிக் கொண்டு இருந்தாலும், அந்தச் சேரும் இடத்திற்கு இட்டுச் சென்று கொண்டு தான் இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து உங்கள் மனதை நல்ல ஸம்ஸ்காரங்களில் செலுத்துங்கள். ஒவ்வொருவரும் தங்களைக் கடுமையாகப் பரிசோதித்து,குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய பாடுபட வேண்டும்.எப்போது மனிதர்கள் கண்டறிந்து, தங்களது சொந்த குறைகளை உணருகிறார்களோ அது மறு பிறவி எடுத்ததற்கு ஒப்பாகும். பின்னர் மனிதர்கள் மறுபடியும், ஒரு புது குழந்தைப் பருவத்திலிருந்து, தொடங்குகிறார்கள்.இதுவே உண்மையான விழிப்புணர்வுத் தருணமாகும்.