azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 May 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
In Taittiriya Upanishad, Varuna directed his son Bhrigu to enter upon spiritual exercises that would ultimately reveal the Truth. Brighu, with full faith in his father’s words, immersed himself in concentrated spiritual practices. When he returned and declared what he had come to know, that food was Brahman, his father told him that his answer was not right. So Brighu continued the spiritual practices and came back with deeper answers, that Prana or vital air is Brahman, then the Mind, and later that the Intellect(Vijnana)is. But each time he was sent back by his father to search deeper. After undergoing a fifth course of spiritual practices, he became aware that spiritual bliss(ananda)was Brahman. Brighu stayed in the bliss of that awareness and never needed to consult his father again. The father then, himself sought Bhrigu, and congratulated him and said, “Son! You have merged in that vision.” Every being must march on to the goal, from food to bliss. (Sutra Vahini, Ch 2.)
தைத்ரீய உபநிஷத்தில், வருணன் தனது மகனாக ப்ருகுவை,இறுதியான சத்தியத்தை வெளிப்படுத்துவதற்குத் தேவையான ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ளுமாறு கட்டளை இட்டார்.தனது தந்தையின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை கொண்ட, ப்ருகு தீவிர ஆன்மீக சாதனைகளில் தன்னை ஆழ்த்திக் கொண்டார்.அவர் திரும்பி வந்து, அன்னமே பரப்ரம்மம் என்று அறிந்து கொண்டதாக அறிவித்த போது, அவரது தந்தை இந்த பதில் சரியானதல்ல எனறு அவரிடம் கூறினார். எனவே, ப்ருகு தனது ஆன்மீக சாதனைகளைத் தொடர்ந்து செய்து, மேலும் ஆழ்ந்த பதில்களான ப்ராணனே பரப்பரம்மம் என்றும்,பின்னர் மனமே என்றும், பின்னர் புத்தியே என்றெல்லாம் கூறித் திரும்பி வந்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது தந்தை அவரை மேலும் ஆழ்ந்து தேடுமாறு பணித்துத் திருப்பி அனுப்பினார்.ஐந்தாவது முறையாக ஆன்மீக சாதனைகளைப் புரிந்த பின், ப்ருகு ஆனந்தமே பரப்பரம்மம் என்பதை உணர்ந்தார். ப்ருகு அந்த ஆனந்த உணர்விலேயே நிலை கொண்டார்; அவர் மறுபடியும் தனது தந்தையைக் கலந்து ஆலோசிக்கத் தேவை இல்லாமல் போய்விட்டது.அவரது தந்தை, தானே அவரை இப்போது தேடி வந்து, பாராட்டி,'' மகனே ! நீ அந்த ஆத்ம சாக்ஷாத்காரத்துடன் ஒன்றரக் கலந்து விட்டாய்.'' என்று கூறினார். ஒவ்வொரு ஜீவ ராசியும் அந்த குறிக்கோளை நோக்கி, அன்னத்திலிருந்து, ஆனந்தத்தை நோக்கி பீடு நடை போட வேண்டும்.