azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Chant the name of God day in and day out. That alone will protect you at all times. Just as air is all pervasive, God is present in you, with you, around you, below you, above you. Hence, be in constant communion with Divinity. When you develop faith in Divinity, you will naturally have unity. Consequently, there will be no scope for enmity. You need not perform any rituals in order to win the grace of God. It is enough if you do namasmarana (chant the Divine Name) from the depth of your heart. Hari Bhajana bina sukha shanti nahiஸ (You cannot attain peace and happiness without singing the glory of God). If you incessantly chant the divine name ‘Rama’, no harm can ever befall you. Do not fritter away this opportunity but put it to the best use. Remember that God is always with you wherever you are. [Divine Discourse, 21 July 2005]
நாள் முழுவதும் இடையறாத இறை நாமஸ்மரணை செய்யுங்கள்.அது மட்டுமே உங்களை எல்லாக் காலங்களிலும் காக்க வல்லது. எவ்வாறு காற்றும் எங்கும் நிரம்பி இருக்கிறதோ,அவ்வாறே இறைவனும் உங்களுள், உங்களுடன், உங்களைச் சுற்றி,உங்களுக்கு கீழே, உங்களுக்கு மேலே உள்ளான்.எனவே, அவனுடன் இடையறாத இணைப்புக் கொண்டிருங்கள். நீங்கள் தெய்வீகத்தில் நம்பிக்கை கொண்டு விட்டால், நீங்கள் இயல்பாகவே ஒற்றுமை உணர்வைப் பெற்று விடுவீர்கள்.அதன் காரணமாக,பகைமை உணர்விற்கு இடமே இருக்காது.இறைவனது அருளைப் பெறுவதற்காக நீங்கள் எந்த விதமான சடங்குகளையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் இறை நாமஸ்மரணை செய்தாலே போதுமானது. '' ஹரி பஜன பினா ஸூக சாந்தி நஹி '' ( இறை நாமஸ்மரணை செய்யாமல் சாந்தி, சந்தோஷங்களை நீங்கள் பெற முடியாது). நீங்கள் இடையறாது தெய்வீக ராம நாமஸ்மரணை செய்தீர்களானால், உங்களுக்கு ஒருபோதும் எந்தத் தீங்கும் நேராது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல்,இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் எங்கிருந்தாலும்,இறைவன் உங்களுடன் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.