azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 28 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 28 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
If the world is real, it must be cognized even during the stage of dreamless deep sleep, but we are not conscious of the world during sleep. Hence, the visible world is as unreal as the dream world. The Universe is a reflection of the Divine(Brahman).The sky might be reflected in a pot of toddy but that does not defile it. Similarly, in this vehicle called body, theAtmadwells pure and undefiled. The fruits of action, good or bad, adhere to the vehicle and not to the indweller. When such wisdom dawns, the dark shadows of the three types ofKarmaflee before it (The three beingSanchita- the entire accumulatedKarma; Prarabdha- theKarmawhose effects we undergo in the present andAagami- theKarmawe perform now whose results will be felt in the future). The suffering and travails of this world are illusory and transitory. Fix your mind firmly on this great fact and set out bravely on the path of spiritual practice, the practice of devotion. (Prema Vahini, Ch 25.)
இந்த உலகம் உண்மையானது என்றால், நமது ஆழ்ந்த ,கனவற்ற உறக்க நிலையிலும் நாம் இதை உணர வேண்டும், ஆனால் நாம் தூங்கும் போது இந்த உலகை உணர்வதில்லை.எனவே, கண்களுக்குப் புலப்படும் இந்த உலகமும், கனவு உலகைப் போன்று பொய்மையானதே.இந்த பிரபஞ்சம், பரப்ரம்மத்தின் ஒரு பிரதிபலிப்பே. ஆகாயம் ஒரு குடத்தில் உள்ள சாராயத்தில் பிரதிபலிக்கலாம், ஆனால் அது அதனால் களங்கமடைவதில்லை. அதைப் போலவே,உடல் எனும் இந்த வாகனத்தில் ஆத்மா தூய்மையாகவும், களங்கமற்றும் உறைகிறது. செயல்களின் விளைவுகள், நல்லவையோ அல்லது கெட்டவையோ,இந்த வாகனத்தைப் பற்றிக் கொள்கின்றனவே அன்றி, இதில் உள்ளுறைபவனை அல்ல . இந்த ஞானம் பிறந்து விட்டால்,மூன்று விதமான கர்மாக்களின் இருண்ட நிழல்கள் அதன் முன் பறந்தோடி விடுகின்றன ( அவையே -சஞ்சித - குவித்து வைக்கப் பட்டுள்ள கர்மா, ப்ராரப்தா- எந்த கர்மாக்களின் பலன்களை தற்காலத்தில் நாம் அனுபவிக்கிறோமோ அது, ஆகாமி -இப்போது நாம் செய்யும் எந்த கர்மாக்களின் பலன்களை எதிர் காலத்தில் அனுபவிப்போமோ அது)இந்த உலகின் கஷ்டங்களும், துக்கங்களும் கற்பனையானவை மற்றும் கலைந்து விடக் கூடியவை.உங்கள் மனதை இந்த தலைசிறந்த உண்மையில் உறுதியாகப் பதித்துக் கொண்டு, பக்தி மார்க்கம் எனும் ஆன்மீகப் பாதையில் தைரியமாக முன்னேறுங்கள்.