azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
People yield to delusion and become one with the darkness caused by false values and attachment to the unreal, the ‘me’ and ‘mine’. But the scripture(Shastra)is like a mother; she does not give up. She persists and pursues; she reminds you of your goal so that you will be saved. The scriptures are to be considered as the cause of the awareness of the incomprehensible, immeasurable and inexpressibleBrahman.The scriptures are numberless, and a lifetime is too short. Aspirants are plenty; doubts and hesitations are numerous; steadfastness is meager. As a result, no one can claim full mastery. But you need not drink the entire ocean to know its taste; one drop is enough. Similarly, it is impossible to understand all the contents of the scriptures. But it is enough to grasp the important lesson that it teaches and put it into practice. The lesson is: constant remembrance of the Divine. (Sutra Vahini, Ch 2)
மனிதர்கள் மாயைக்கு ஆளாகி, ''நான்'', '' எனது'' என்ற பொய்யான பற்றுதல்கள் மற்றும் தவறான பண்புகளால் ஏற்படும் இருளுடன் ஒன்றி விடுகிறார்கள். ஆனால்,சாஸ்திரங்கள் தாயைப் போன்றவை;அவள் கைவிடுவதில்லை.அவள் இடையறாது முயலுகிறாள்; உங்களைக் காப்பதற்காக உங்களது குறிக்கோளை உங்களுக்கு நினைவுறுத்துகிறாள். புரிந்து கொள்வதற்கு அரிதான, அளவிட முடியாத மற்றும் விவரிக்க முடியாத பரப்ரம்மத்தைப் பற்றி உணர்வதற்கான தூண்டுதலாக, சாஸ்திரங்களைக் கருத வேண்டும். சாஸ்திரங்களோ எண்ணிலடங்காதவை, ஒரு மனித வாழ்க்கையோ மிகவும் குறுகிய காலம் கொண்டது. ஆன்மீக சாதகர்களோ பலர், சந்தேகங்களும்,தயக்கங்களுமோ கணக்கற்றவை, விடாமுயற்சியோ மிகவும் குறைவு.இதன் காரணமாக,எந்த ஒருவரும் முழுமையான பாண்டித்யம் பெற்றதாக கூறிக் கொள்ள முடியாது. ஆனால்,அதன் சுவையைத் தெரிந்து கொள்ள, கடல் நீர் அனைத்தையும் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை;ஒரு சொட்டு நீரே போதுமானது. அதைப் போலவே, சாஸ்திரங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இயலாத காரியம்.ஆனால்,அதன் முக்கியமான பாடத்தை மட்டும் புரிந்து கொண்டு, அதை நடைமுறைப் படுத்தினால் போதுமானது.இதனால் அறியப்படும் பாடம் என்ன என்றால்; இடையறாத இறைவனை எண்ண வேண்டும் என்பதுதான்.