azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
For this universal ailment of the cycle of birth and death(bhava-roga),listening to spiritual discourses(sravana)and singing God's name(kirtana)is a mandatory prescription. God's Name, Vedas and Puranas must be recited and listened to. Performing all these, if you do not awaken your own inner consciousness(antah-karana),you will fall into perdition. Hence, to attain God's Grace, the feeling of 'I-ness'(ahamkara),which makes you say, "I am the doer", should be rooted out from your heart. Everyone learned or illiterate, should feel an overwhelming urge to know God. God has equal affection toward all His children, for to illumine is the nature of light. So too, uttering God's name, one can progress in the realisation of God, another may perhaps do wicked deeds! It depends on your usage of the light. Remember - the Lord's name is without blemish, always and forever. (Prema Vahini, Ch 21.)
இந்த பிரபஞ்ச மயமான பிறப்பு இறப்பு என்ற சுழற்சி வியாதிக்கு( பவ ரோகம்), ஆன்மீக பிரசங்கங்களைக் கேட்பதும்( ஸ்ரவணம்), இறைவனது புகழைப் பாடுவதுமே (கீர்த்தனம்), கட்டாயமான அரு மருந்தாகும். இறை நாமம், வேதங்கள் மற்றும் புராணங்களை பாராயணம் செய்ய வேண்டும், கேட்கவும் வேண்டும்.இவற்றைச் செய்து கொண்டே, நீங்கள் உங்களது அந்தராத்மாவை விழிப்படையச் செய்யவில்லை என்றால்,நீங்கள் அழிவில் தான் வீழ்வீர்கள். எனவே, இறை அருளைப் பெற வேண்டும் எனில் ''நானே செய்கின்றவன்'' என்ற உணர்வைத் தூண்டும் , '' நான் '' என்ற அஹங்காரத்தை உங்கள் இதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். ஒவ்வொருவரும், படித்தவரோ அல்லது பாமரரோ இறைவனைத் தெரிந்து கொள்வதில் அபரிமிதமான ஆர்வத்தைக் காட்ட வேண்டும். இறைவன் தனது குழந்தைகள் அனைத்திடமும் ஒரே மாதிரியான பாசம் கொண்டவனே ஏனெனில் ஒளியூட்டுவதே விளக்கின் இயல்பு. இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டு ஒருவன் இறைவனை உணர்வதில் முன்னேற்றம் அடையலாம், மற்றொருவன் தீய செயல்களைப் புரியலாம்! விளக்கை எவ்வாறு நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அது இருக்கிறது. இறைவனது திருநாமம் எப்போதும், என்றைக்கும் களங்கமற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.